Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பஞ்சமி திதியில் பிறந்த ஜாதகர்கள் வழிபடவேண்டிய தெய்வம் எது தெரியுமா...?

பஞ்சமி திதியில் பிறந்த ஜாதகர்கள் வழிபடவேண்டிய தெய்வம் எது தெரியுமா...?
, வெள்ளி, 6 மே 2022 (13:06 IST)
அமாவாசை முடிந்த ஐந்தாம் நாளும், பௌர்ணமி முடிந்த ஐந்தாம் நாளும் பஞ்சமி திதி வரும். இது ஓர் மகத்தான திதி என்று சொல்லப்படுகிறது.


சப்த மாதர்களில் வராகியும் ஒருவர். நாம் செய்கின்ற காரியத்தில் ஜெயமும், காரிய சித்தியும் தருபவள். இந்நாளில் சக்தி தேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் அனைத்து நன்மைகளும் நமக்குக் கிடைக்கும்.

எல்லோரும் பஞ்சமி திதியில் விரதமிருந்து வழிபடலாம். ஆனால், குறிப்பாக பஞ்சமி திதியில் பிறந்த ஜாதகர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஜாதகர்கள் பஞ்சமி திதியில் பாம்பு புற்று உள்ள ஏதேனும் ஒரு அம்மன் கோயிலுக்குச் சென்று ஐந்து எண்ணெய் கலந்து அல்லது நல்லெண்ணெய்யை சிகப்பு திரி போட்டு குத்து விளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி நம் வேண்டுதல்களை மனத்திற்குள் நினைத்துக்கொண்டே வழிபட வேண்டும்.

நிவேதனமாகப் பூண்டு கலந்து தோல் நீக்காத உளுந்த வடை அல்லது நவதானிய வடை மிளகு சேர்த்த வடை, தயிர்ச்சாதம், மொச்சை, சுண்டல், பானகம் ஆகியவை நிவேதனமாகப் படைக்கலாம்.

ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ.. என்ற மந்திரத்தைச் சொல்லி வழிபட எல்லாவித நன்மைகளும் கிடைக்கும். குறிப்பாக ஏவல், பில்லி, சூனியம் போன்றவையால் பாதிப்புகள் ஏற்படாது.  குடும்பத்தில் சுபிக்ஷம் உண்டாகும். கடன் தொல்லை, வறுமை ஒழியும். வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி என இரண்டு முறை வரும் பஞ்சமி திதியிலும் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (06-05-2022)!