Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நல்ல நேரம் மிஸ் ஆயிட கூடாது; வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்னதாகவே வேட்பு மனு தாக்கல்!

Advertiesment
Tamilnadu
, வெள்ளி, 12 மார்ச் 2021 (15:10 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் பாஜக வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்னதாகவே ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தேசிய கட்சியான பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதற்காக பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிடவில்லை. பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் முன்னே திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

கட்சி பட்டியல் வெளியிடும் முன்னே வேட்பு மனு தாக்கல் செய்தது குறித்து பேசியுள்ள அவர் இன்று நல்ல நேரம் இருந்ததால் இன்றே வேட்பு மனு தாக்கல் செய்ததாக கூறியுள்ளார். அவரது இந்த செயலுக்கு திருநெல்வேலி பாஜகவினரே அதிருப்தி தெரிவித்துள்ளதாக பேசிக்கொள்ளப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்ஜெட் பத்பமனாபன்களை குஷிப்படுத்த வரும் சாம்சங் புதிய படைப்பு!