Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூஜைக்கு பயன்படுத்தும் பூக்கள் எவ்வாறு இருக்கவேண்டும் தெரியுமா...?

பூஜைக்கு பயன்படுத்தும் பூக்கள் எவ்வாறு இருக்கவேண்டும் தெரியுமா...?
கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படும் அனைத்துமே சுத்தமாக இருத்தல் அவசியம். உடல், மனத்தூய்மையோடு, பூஜைக்கு பயன்படுத்தபடும் பொருட்கள், நைவேத்தியம் செய்ய பயன்படுத்தபடும் பொருட்கள் என அனைத்துமே சுத்தமாய் இருத்தல் அவசியம். 

வீட்டில் இருக்கும் பொருட்கள் சுத்தமாய் இருத்தல் போதாது. பூஜைக்கு பயன்படுத்தபடும் பழங்கள், வெற்றிலை பாக்கு, பூக்கள் என அனைத்துமே சுத்தமாய் இருத்தல் அவசியம். பூஜைக்கு எப்படிப்பட்ட பூக்களை எப்படி பயன்படுத்தவேண்டுமென சில நியதிகள் உள்ளது.
 
அசுத்தமான கைகளினால் தொட்டு பறிக்கப்பட்ட பூக்கள், அசுத்தமான பாத்திரம் அல்லது பைகளில் கொண்டுவரப்பட்ட பூக்கள், காம்பிலிருந்து தானாக விழுந்த பூக்கள், காய்ந்த பூக்கள், முகர்ந்து பார்க்கப்பட்ட பூக்கள், அசுத்தமான இடங்களில் பூத்த பூக்கள். ஆமணக்கு இலையில் கட்டிவைத்த பூக்கள், கல்களில் பட்ட பூக்கள்,  கட்டிய ஆடையிலும், கையிலும் வைத்த பூக்கள், பூச்சிகள் கடித்த பூக்கள், சிலந்தி இழை சுற்றிய பூக்கள், பறவைகள் எச்சமிட்ட பூக்கள், முடி இருக்கும் பட்ட  பூக்கள், இரவு நேரத்தில் பறித்த பூக்கள், தண்ணீரில் முழுகிய பூக்கள், ஆகியவை பூஜைக்கு ஆகாத பூக்கள். 
 
தற்போது பலர் கைகளில் மலர்களை எடுத்து அவற்றை துண்டு துண்டாக்கி கைகளினால் கிள்ளி பூஜை செய்கின்றனர். இது மிகவும் தவறானது. பூக்களை முழுதாகப்  பயன்படுத்த வேண்டுமே தவிர, கிள்ளி பொடிப்பொடியாக்கி வழிபாடு செய்தல் கூடாது. வில்வ இலை, துளசி இலை ஆகியவற்றை தளமாகச் சாத்த வேண்டும் என  ஆகம விதிகள் சொல்கின்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரலட்சுமி நோன்பு விரதம் இருக்கும் முறைகளும் பலன்களும்...!!