Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தை கார்த்திகை விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது....?

தை கார்த்திகை விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது....?
, புதன், 9 பிப்ரவரி 2022 (10:45 IST)
பரணி நட்சத்திரத்தன்று பகலில் உண்டு இரவில் உண்ணாது இருக்க வேண்டும். கார்த்திகை அன்று காலையில் நீராடி முருகன் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தி முருகனின் அருட்பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். முழு தினமும் முருகனை தியானம் செய்ய வேண்டும்.


மறுநாள் ரோகிணியன்று காலையில் நீராடி நித்திய வழிபாடு செய்து, அன்னதானத்திற்கு பிறகு அமுது செய்ய வேண்டும். பிறகு ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகையன்று விரதம் மேற்கொள்ள வேண்டும்.

கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால் அவர்களுக்கு கல்வி, ஆயுள், நல்ல மனைவி, நன்மக்கட் பேறு, நிம்மதியான வாழ்வு ஆகிய எல்லாம் கிடைக்கும்.

கார்த்திகை விரதம் இருப்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு ஏதும் உண்ணாமல் உபவாசம் இருக்க வேண்டும். உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

அதிகாலை எழுந்து நீராடி, பூஜை அறையை அலங்காரம் செய்ய வேண்டும். அதில் முருகப்பெருமானின் படத்திற்கு சந்தன திலகமிட்டு, குங்குமம் வைத்து மணமிக்க முல்லை மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். உங்களிடம் வேல் இருந்தால் வேலையும் இப்படி அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நைவேத்தியத்திற்கு தேவையானவற்றை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

பின்னர் ஆறுமுகனுக்கு ஒவ்வொரு நைவேத்தியமாக படைத்து, முருகனுடைய திருப்புகழ், போற்றிகள், கந்த சஷ்டி கவசம் ஆகிய மந்திர பாடல்களை பாடி, ஆறு விதமான பூக்களில் ஒவ்வொரு பூக்களாக அர்ச்சிக்க வேண்டும். பின்னர் தூப, தீப, ஆராதனைகள் காண்பிக்க வேண்டும். பின் நைவேத்தியத்தை வீட்டில் இருக்கும் அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தை கிருத்திகை நாளில் விரதம் இருப்பதன் சிறப்புக்கள் !!