Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆருத்ரா தரிசனத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா...?

Advertiesment
ஆருத்ரா தரிசனத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா...?
, சனி, 18 டிசம்பர் 2021 (16:53 IST)
ஆருத்ரா என்பது ஒரு நட்சத்திரத்தின் பெயர். தமிழில் ஆதிரை, அல்லது திருவாதிரை என்று அழைக்கப்படும் நட்சத்திரமே சமஸ்கிருதத்தில் ஆருத்ரா என்று அழைக்கப்படுகிறது.

'ஆருத்ரா' என்ற சொல்லுக்கு ஈரமான, இளகிய, புத்தம் புதிய, பசுமையான என்ற பல அர்த்தங்கள் உண்டு என்கிறார்கள். இந்தத் திருவாதிரை நட்சத்திரமே சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் ஆகும்.
 
ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திர தினம் என்பது சிவ வழிபாட்டுக்கு உகந்தது. அந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து சிவனை வழிபடுவார்கள். அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விரத நாள்.
 
இந்த நாளில் சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு வாய்ந்த அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். இந்நாளில் நாம் காணும் நடராஜரின் அற்புதமான நடனத் திருக்காட்சியே ஆருத்ரா தரிசனம் என்று போற்றப்படுகிறது.
 
இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் பெண்கள் விரதம் இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை மையமாகக் கொண்டு பெண்கள் சிலர் திருவாதிரை விரதம் எடுத்து தங்கள் தாலியினை மாற்றிக் கொண்டு சிவ பெருமானை வழிபட்டு தங்களின் கணவருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தில்லை நடராஜ பெருமானுக்கு களி படைத்து வழிபடுவது ஏன் தெரியுமா...?