Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதோஷத்தில் எத்தனை வகைகள் உள்ளது தெரியுமா....?

பிரதோஷத்தில் எத்தனை வகைகள் உள்ளது தெரியுமா....?
தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய, மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம்.

தினசரி பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், நட்சத்திரப் பிரதோஷம், பூரண பிரதோஷம், திவ்யப் பிரதோஷம், தீபப் பிரதோஷம், அபயப் பிரதோஷம்  என்னும் சப்தரிஷி பிரதோஷம், மகா பிரதோஷம், உத்தம மகா பிரதோஷம், ஏகாட்சர பிரதோஷம், அர்த்தநாரி பிரதோஷம், திரிகரண பிரதோஷம், பிரம்மப் பிரதோஷம், அட்சரப் பிரதோஷம், கந்தப் பிரதோஷம், சட்ஜ பிரபா பிரதோஷம், அஷ்ட திக் பிரதோஷம், நவக்கிரகப் பிரதோஷம், துத்தப் பிரதோஷம் என 20 வகை  பிரதோஷங்கள் உள்ளன.
 
நித்தியப் பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ, அவர்களுக்கு முக்தி நிச்சயம் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.
 
பிரதோஷ திதியாகிய திரயோதசி திதியில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை வழிபடுவது நட்சத்திரப் பிரதோஷம் ஆகும். இந்த நாளில் மாலை வேளையான பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
 
பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ண பட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் திரயோதசி திதியே 'மாதப் பிரதோஷம்' ஆகும். இந்தத் திதியின் போது மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.
 
அமாவாசைக்குப் பிறகான, சுக்ல பட்சம் என்ற வளர்பிறை காலத்தில் 13-வது திதியாக வருவது திரயோதசி திதி. இந்தத் திதியே 'பட்சப் பிரதோஷம்' என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திதியின் மாலை நேரத்தில் பட்சி லிங்க வழிபாடு செய்வது நல்லது. 
 
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து வழிபடுவதற்கு தீபப் பிரதோஷம் என்று  பெயர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுக்ர பிரதோஷத்தில் சிவ வழிபாட்டு பலன்கள் !!