Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுக்ர பிரதோஷத்தில் சிவ வழிபாட்டு பலன்கள் !!

சுக்ர பிரதோஷத்தில் சிவ வழிபாட்டு பலன்கள் !!
சுக்ர பிரதோஷத்தில் சிவ வழிபாடு நல்லது. சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல  வேண்டும். பலன்: உறவு வளப்படும் . சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

ஞாயிற்றுக் கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘ஆதிப் பிரதோ‌ஷம்’ என்றும், திங்கட்கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘சோமவாரப் பிரதோ‌ஷம்’ என்றும், செவ்வாய்க்கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘மங்கள வாரப் பிரதோ‌ஷம்’ என்றும், புதன்கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘புதவாரப் பிரதோ‌ஷம்’ என்றும், வியாழக் கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘குருவாரப் பிரதோ‌ஷம்’ என்றும், வெள்ளிக்கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘சுக்ர வாரப் பிரதோ‌ஷம்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை காட்டிலும் சனி பிரதோஷத்திற்கே சிறப்புக்கள் அதிகம்.
 
பிரதோஷ விரதம் இருந்து சிவபெருமான், நந்தியை வழிபாட செல்லும் போது நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என சிவபுராணம் படிப்பது அவசியம். யாரை பற்றியும் குற்றம் குறை சொல்லி பேச வேண்டாம். 
 
எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டாம். சிவனின் நாமத்தை மாட்டும் உச்சரியுங்கள். நந்தியை மறைத்துக் கொண்டு சிவ பெருமானை வணங்காதீர்கள். நந்தியின் கொம்புகளுக்கு இடையே சிவ தரிசனம் பாருங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (26-03-2021)!