Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்திரத்திலிருந்து தோன்றிய சித்திர குப்தரை பற்றி தெரியுமா...?

Webdunia
சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி நாள் சித்ரா பௌர்ணமி நாளாகும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சித்திர குப்தனுக்கு என்று ஒரு தனிக்கோயிலே இருக்கிறது. சித்ரா பௌர்ணமி அன்று, சித்திர குப்தனுக்கு சித்திரலேகாவுடன் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து சித்திர குப்தர் மற்றும் சித்திரலேகா இருவரும் வீதி உலா வருகின்றனர்.
 
சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் சைவர்கள் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய  கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள்.
 
அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும். இந்நாளை சித்ர குப்தன் பிறந்தநாள் என்றும், சித்ர குப்தனின் திருமண நாள் என்றும் இருவேறு நம்பிக்கைகள் உள்ளன.
 
ஒரு சமயம், கயிலையில் பார்வதி தேவி, தங்கப்பலகையில், சித்திரம் ஒன்றை வரைந்தார். அந்தச் சித்திரத்திற்கு, சிவனாரை உயிர் கொடுக்க வேண்டினார். அந்த‌  வேண்டுகோளை ஏற்று, சிவபெருமானும் சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். இவ்வாறு சித்திரத்தில் இருந்து தோன்றியதால் அவர், சித்திர புத்திரன் என்றும் சித்ரகுப்தர்  என்றும் அழைக்கப்படலானார்.
  
சித்திரத்திலிருந்து சித்திர குப்தர் தோன்றிதை குறிக்கும் சித்திரா பௌர்ணமி என பெயர் ஏற்பட்டது என புராணங்கள் கூறுகிறது. வசந்த ருதுவில் நீர் நிலைகள்  தெளிவாக இருக்கும். அந்த தெளிந்த நீரில் பௌர்ணமி நிலவு அழகிய சித்திரத்தை போல் தோன்றும் என்பதால்தான் சித்ரா பௌர்ணமி என பெயர் ஏற்பட்டது என  மற்றொரு கதை கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்