Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் என்ன தெரியுமா...?

Advertiesment
மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் என்ன தெரியுமா...?
உலகத்தில் எப்போதெல்லாம் அநீதியும் தீய சக்தியும் தலை விரித்து ஆடுகிறதோ, அப்போதெல்லாம் அதனை வேரோடு கருவறுக்க விஷ்ணு பகவான் வந்து சேர்வார்  என்று நம்பப்படுகிறது.

1. மச்ச அவதாரம் - தாயின் வயிற்றிலிருநது ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன்.
 
2. கூர்ம அவதாரம் - மூன்றாம் மாதம் கவிழந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.
 
3. வராக அவதாரம் - ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.
 
4. நரசிம்ம அவதாரம் - எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம் .
 
5. வாமன அவதாரம் - ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.
 
6. பரசுராம அவதாரம் - வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.
 
7. ராம அவதாரம் - திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது.
 
8. பலராம அவதாரம் - இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.
 
9. கிருஷ்ண அவதாரம் - முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.
 
10. கல்கி அவதாரம் - இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும், தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட்சய திருதியை நாளின் சிறப்புக்கள் என்ன தெரியுமா...?