Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சித்திரை மாத ராசிபலன்கள் 2023! – கும்பம்!

Advertiesment
Monthly Astro Image
, வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (20:29 IST)
சனி பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு பணம் வருவதில் சிரமம் எதுவும் இருக்காது.

இந்த ஆண்டு தனது கருத்துக்களால் மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் உங்களுக்கு உங்களது முயற்சிகள் வெற்றி பெறும். பணவரத்து இருக்கும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும். வசதிகளுக்குக் குறைவிருக்காது.

தொழில் வியபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை அவரால் உதவி உண்டாகும். சுபவிரைய செலவுகள் அதிகரிக்கும்.
பெண்களுக்கு தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன் நிறுத்திதான் தப்பித்துக் கொள்ள வேண்டி வரும். புதிய முயற்சிகளில் நல்ல பலன்களே வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். கவலை நீங்கும்.

பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு வெண் மொச்சை சுண்டல் செய்து நைவேத்யம் செய்து விநியோகம் செய்ய பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சித்திரை மாத ராசிபலன்கள் 2023! – மகரம்!