Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமாவாசையில் பிறக்கும் குழந்தைகள் தவறான வழியை பின்பற்றக்கூடும்; இது உண்மையா?

Advertiesment
அமாவாசையில் பிறக்கும் குழந்தைகள் தவறான வழியை பின்பற்றக்கூடும்; இது உண்மையா?
சூரியனும், பூமி, சந்திரன் இவைகள் சார்ந்த விவரம் தான் பௌர்ணமி மற்றும் அமாவாசை. அகத்தியர் அவர்கள் தான் விண்ணுலக தகவலை நமக்கு அருளி  உள்ளார்.
சூரியன் ஆன்மா என்பதால் ஆவி உலகில் உள்ள ஆன்மாக்கள் அமாவசையன்று பூமிக்கு வரும் என்று சோதிட நூல்கள் சொல்கிறது. அமாவாசையில் பிறந்த குழந்தைக்கு சாந்தி செய்ய வேண்டும். இல்லையெனில் வாழ்வினில் தவறான வழியை அந்தக் குழந்தை பின்பற்றக்கூடும் என ‘சாந்தி குஸுமாகரம்’ என்ற  நூல் கூறுகின்றது.
 
அமாவாசை அன்று பூமி சந்திரனை முழுவதுமாக மறைத்து விடுகிறது. சந்திர ஆகர்ஷணம் சரியான முறையில் பூமியில் கிடைப்பது இல்லை என்பது தான். சந்திரனுடைய சக்தி சரியாக இல்லாதபோது பிறக்கும் குழந்தைகள் தாயாரிடம் இருந்து போதிய அரவணைப்பைப் பெற முடியாது அல்லது குழந்தை தாயிடம்  அவ்வளவாக ஒட்டாது என்பது சாஸ்திர விதி மட்டுமல்ல அனுபவ உண்மையுமாகும்.
 
தாயின் அன்பைப் பெறாத அல்லது தாய் மீது அன்பு வைக்காத குழந்தைகளைச் சிறந்தவர்கள் என்று கூறுவது மிகவும் சிரமமாகும். இத்தகைய குழந்தைகளிடம்  ல்லவை அல்லாத இயல்பு சற்று அதிகமாக இருக்கும்.
 
பிறப்பதை நாம் தடுக்க முடியாதே! ஆனால், பரிகாரம் செய்து நல்வாழ்வு வாழ முடியுமே! நாம் அனுபவிக்கும் சுகத்தில் சாஸ்திர விரோதமான காரியங்களை  விலக்க வேண்டும் என ஆதிசங்கரர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தானங்கள் செய்வதால் கிடைக்கும் பலன்கள்...!