Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி

Advertiesment
கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி
, வெள்ளி, 15 ஜூன் 2018 (07:30 IST)
கேரளவில் சமீபத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் உள்ள கோழிக்கோடு தாமரஞ்சேரி என்ற பகுதியில் ஏற்பட்ட திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளதாக திடுக்கிடும் செய்திகள் வெளிவந்துள்ளது 
 
நிலச்சரிவு குறித்த தகவல் அறிந்தவுடன் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நிலச்சரிவு நிகழ்ந்த பகுதியில் 3 குழந்தைகள் உட்பட 7 பேரை காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணியில் மீட்பு பணியினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
webdunia
அதுமட்டுமின்றி இந்த நிலச்சரிவால் சுமார் 300 வீடுகள் மண்ணில் மூழ்கியுள்ளதாகவும், அந்த இடிபாடுகளில் யாராவது சிக்கியுள்ளார்களா? என்பது குறித்து தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விராத் கோஹ்லியை கடுமையாக விமர்சனம் செய்த பாஜக எம்.எல்.ஏ