Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பக்தர்களின் பாவங்களை போக்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு !!

பக்தர்களின் பாவங்களை போக்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு !!
, வியாழன், 23 டிசம்பர் 2021 (18:20 IST)
ஸ்ரீசக்கரத்தாழ்வாரின் நாளான வியாழன் அன்று சிவப்பு, மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும், வாழ்வில் சுபீட்சம் காணலாம்.


திருமணம் ஆகாத கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். சுமங்கலிகள் சுகமாக வாழ்வர் என்பது ஐதீகம்.
 
சக்கரத்தாழ்வாரை வழிபடும் பக்தர்களின் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம். சங்கடங்களை தீர்க்கும் சக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், அவர் இரண்டடி முன் வைத்து பிரச்சினைகளையும் துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதி.
 
திருமாலுக்குச் செய்யப்படும் அனைத்து வழிபாடுகளும் சுதர்சனருக்கும் செய்வது என்பது நடைமுறையில் உள்ளது. 
 
சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள் எல்லாம் நீங்கும். நெய் விளக்கு ஏற்ற ஓம் நமோ பகவதே மகா எதிர்னாய நம என வழிபட்டால் கூடுதல் பலன் கிட்டும் என்பது ஐதீகம்.
 
புதன், சனிக்கிழமைகளில் துளசி சாற்றி துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 முறை வலம் வந்து வழிபட்டால், பிரார்த்தனை வேண்டுதல்கள் நிறைவேறும். இங்கு கிருத்திகை தோறும் நடைபெறும் சுதர்சன ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேற வழிபாடு செய்கின்றனர். 
 
பிரம்மோத்ஸவம் மற்றும் பெருமாள் கடலுக்குச் சென்று தீர்த்தவாரி மேற்கொள்ளும் சமயங்களிலும் சுதர்சனருக்கு முக்கியப் பங்கு உண்டு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அகத்தியர் ஜெயந்தி எப்போது கொண்டாடப்படுகிறது தெரியுமா...?