ஆடியில் அம்மன் வழிபாடு அதிக முக்கியத்துவம் பெற்று இருப்பதை போல ஆவணி மாதம் சூரியனின் அதிதெய்வங்களான சிவன் விஷ்ணு வழிபாடு அதிக சிறப்பு பெற்றவை.
தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து சூரியன் உதிக்கும் திசைக்கு முன் நின்று சூரிய நமஸ்காரம் செய்யலாம்.
ஞாயிறு காலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து சூரிய உதயத்தின் போது கோதுமை தானியங்களை சிகப்பு வஸ்திரத்தில் முடிந்து தாமரை புஷ்பங்கள் கொண்டு தீபமேற்றி பூஜித்து பின்னர் கோதுமை தானியங்களை தானமாகவோ, பசுக்களுக்கோ கொடுக்கலாம்.
சிவ ஆலயங்களில் தொண்டு செய்வது, ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனிற்கு அல்லது விஷ்ணு பகவானிற்கு சிகப்பு வஸ்திரம் தானமாக கொடுத்து தாமரை மலர்களால் அலங்கரித்து விரதமிருந்து வழிபடலாம்.
சிவன் விஷ்ணு ஆலயங்களுக்கு செப்பு பாத்திரம் தானம் கொடுப்பது. தீபங்கள் ஏற்றவது சிறந்த பலனை தரும்.
ஆவணி மாதத்தில் பல தோஷம் போக்கவல்ல பிரதோஷ வழிபாட்டை விரமிருந்து வழிபடுவதும் சிறப்பு.
ஆதித்ய ஹிருதயம், சூரிய காயத்ரி மற்றும் காயத்ரி ஸ்லோகங்கள் பாராயணம் செய்வது மிக சிறப்பு பெற்றது.
சூரியன் உதயத்தின் போது கிழக்கு திசை நோக்கி கலசம் வைத்து அல்லது நெய் தீபமென்றை வைத்து, பின்வரும் மந்திரங்களை சொல்லி தாமரை மலர்களால் சூரியனை பூஜிக்கலாம்.