Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோமாதா வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள் !!

கோமாதா வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள் !!
கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பெரும் தவறுகளால்  உண்டாகும் பிரம்மஹத்தி தோஷங்கள் விலகிவிடும்.
 

முன்னோருக்கு செய்ய வேண்டிய நீத்தார் கடன்களான திதி, கர்மா செய்யாமல் இருந்தால் ஏற்படும் பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால்  நீங்கும். மேலும் பித்ரு தோஷங்களும் நீங்கும்.
 
பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
 
கோமாதாவை சிரத்தையுடன் வணங்கிட பிரம்மா, விஷ்ணு, முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் நமக்கு கிடைக்கும்.
 
உண்பதற்கு  பசுவிற்கு புல்  கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்)  நம்மை பிடித்த தீராத பாவங்கள்   விலகும்.
 
பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான காலமாகும்.
 
பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது 8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள்  பூசிக்கொண்டார்கள்.
 
"மா" என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது. பசு வசிக்கும் இடத்தில், அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு மடங்கு  பலன்களை அள்ளித் தரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்த திருஷ்டி தோஷமும் நம்மை பாதிக்காமல் இருக்க பரிகாரங்கள் !!