Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவாமி ஐய்யப்பன் பற்றிய அரிய தகவல்கள்....!!

சுவாமி ஐய்யப்பன் பற்றிய அரிய தகவல்கள்....!!
ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா என்றால் நம் பாவங்களை அழித்து ஞானத்தைப் பெற அய்யப்பனை சரண் அடைகிறோம் என்று பொருள்.

ஒரு மண்டலம் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு அய்யப்பனை தேடி  செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது.
 
சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள் 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு. கன்னிபூஜை நடத்தி விருந்து கொடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உளமார்ந்த பக்தி ஒன்றையே அய்யப்பன் விரும்புகிறார்.
 
சபரிமலையை அடைந்ததும் சரணம் கூறியபடி செல்ல வேண்டும். உங்கள் கழுத்தில் உள்ள மாலை நெஞ்சில் அடிபடும் போதெல்லாம் அய்யப்பன் உங்கள் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.
 
மகிஷியை வதம் செய்த மணிகண்டன் அவன் உடல் வளர்ந்து பூமிக்கு மேல் வரக்கூடாது என்பதற்காக கனமான கல்லை வைத்ததாக வரலாறு. இதை நினைவு கூறும் வகையில் அழுதையில் எடுத்த கற்களை கல்லிடும் குன்று பகுதியில் பக்தர்கள் போடுகிறார்கள்.
 
நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அகந்தைகளையும் விரட்டவே சபரிமலை பதினெட்டாம் படியில் மூன்று கண்களை உடைய தேங்காயை  உடைக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாஸ்து: வீடு கட்ட பஞ்சபூதங்களின் அமைப்பு அவசியமா...?