Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உப்பை கொண்டு இந்த பரிகாரம் செய்வதால் என்ன பலன்கள் தெரியுமா...?

உப்பை கொண்டு இந்த பரிகாரம் செய்வதால் என்ன பலன்கள் தெரியுமா...?
உப்பில் பரிகாரம் செய்வதற்கு ஒரு கண்ணாடி டம்ளர், 2 கைப்பிடி உப்பு, சுத்தமான தண்ணீரும் போதும். சிலபேருக்கு தேவையற்ற பயம் மனதில் இருந்து கொண்டே  இருக்கும்.


நம் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களுக்கு, “இது நடந்து விடுமோ அல்லது அது நடந்து விடுமோ” என்ற தவறான நினைப்பும், எதிர்மறை சிந்தனைகளும் மனதிற்குள் வந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்கள் இரவில் நிம்மதியாக தூங்கூட மாட்டார்கள்.
 
இந்த பிரச்சனை உங்களுக்கு இருந்தால், நீங்கள் படுக்கும் இடத்தில் ஒரு கண்ணாடி டம்ளரில், இரண்டு கைப்பிடி அளவு உப்பு போட்டு, அந்த டம்ளர் முழுவதும்  தண்ணீரால் நிரப்பி விட வேண்டும். இந்தக் கண்ணாடி டம்ளரை நீங்கள் படுக்கும் இடத்தில் கட்டிலுக்கு அடியில் வைத்துக் கொள்ளலாம். காலையில் எழுந்தவுடன், முதல் வேலையாக டம்ளருக்குள் இருக்கும் தண்ணீரை வாஷ் பேசினில் கொட்டி விடவும். 21 நாட்கள் தொடர்ந்து இப்படி செய்தாலே பலவீனமாக இருக்கும்  உங்களது மனம், பலம் அடைவதை உணர முடியும். 
 
சிலருடைய வீடு நிம்மதி இழந்து இருக்கும். சதாகாலமும் சண்டை சச்சரவு உள்ள வீடுகளில், ஒரு கண்ணாடி டம்ளரில், உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி தயார்  செய்து உங்களது குளியல் அறையில் வைத்து விட வேண்டும். மறுநாள் காலை அந்தத் தண்ணீரை எடுத்து உங்கள் வீட்டு வாஷ் பேசினில் ஊற்றி விடலாம்.  இதற்கும் 21 நாட்கள் தான் கணக்கு. 
 
மேற்குறிப்பிட்டுள்ள எந்த பிரச்சனைக்கு பரிகாரத்தை செய்வதாக இருந்தாலும் இரவு நேரத்தில்தான் செய்யப்பட வேண்டும். அதாவது எட்டு மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்து வைத்து விடுங்கள். காலை எழுந்ததும் அந்த தண்ணீரை எடுத்து கீழே கொட்டி விடவும். இவ்வளவு தான். மாதத்திற்கு ஒரு முறையாவது  சமுத்திர நீரில், அதாவது கடல் நீரில் குளிப்பது எதிர்மறை ஆற்றலை குறைக்கும். 
 
கடல் நீரை எடுத்து வந்து நம் வீடு முழுவதும் தெளிப்பது நல்ல பலனை தரும். எல்லோராலும் இதனை செய்வது கடினம். எனவே கல் உப்பு கலந்த நீரை நம் வீட்டில் இப்படி, முறையாக உபயோகப்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்பதற்காக நம் முன்னோர்களால் கூறப்பட்ட பரிகாரங்கள் தான் இவை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த திசையில் தலைவைத்து படுக்க கூடாது என கூறுவதற்கான காரணம் என்ன...?