Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்விக்கு அதிபதியாக விளங்கும் ஹயக்ரீவர் வழிபாட்டு பலன்கள் !!

கல்விக்கு அதிபதியாக விளங்கும் ஹயக்ரீவர் வழிபாட்டு பலன்கள் !!
ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் திருமாலின் பதினெட்டாவது அவதாரமாகக் கருதப்படுகிறது. வேதங்களைக் காப்பாற்றவே ஹயக்ரீவ அவதாரம் நிகழ்ந்ததால் இவரே கல்விக்கு அதிபதியாகவும் திகழ்கிறார்.

மாணவர்கள் கவனத்துடன் பாடங்களைப் படித்த பின்னர், வைணவக் கோயிலில் குடி கொண்டிருக்கும் ஹயக்ரீவரை கீழுள்ள சுலோகத்தைச் சொல்லி, அவருக்குப் பிடித்த ஏலக்காய் மாலையை அணிவித்து வணங்கி வரவேண்டும்.
 
மந்திரம்:
 
ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம்
உபாஸ்மஹே.
 
பொருள் : தூய மெய்ஞ்ஞான வடிவமும், ஸ்படிகம் போன்று தூய வெண்நிறமும், அறிவுச் செல்வத்திற்கு உலகில் ஆதாரமாக விளங்கி வருபவருமான ஹயக்ரீவரை  வணங்குகிறேன்.
 
இப்படி வழிபாடு செய்தால் படித்த பாடங்கள் நன்கு மனதில் தங்கும். தேர்வு நேரத்தில் சட்டென நினைவுக்கு வரும். தேவையில்லாத பயம், கவலை போன்றவை  அகலும்.
 
கல்வி, கலை, ஞானம் போன்றவற்றுக்கு குருவான ஹயக்ரீவர் சில இடங்களில் தாயார் லட்சுமிதேவியைத் தன் மடியில் வைத்து லட்சுமி ஹயக்ரீவராக  காட்சியளிப்பார். இவரை வணங்கினால் கல்விச் செல்வமும், பொருட் செல்வமும் சேர்ந்து கிட்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (09-12-2020)!