Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பைரவரை வளர்பிறை அஷ்டமி விரத பூஜை நன்மைகள் !!

பைரவரை வளர்பிறை அஷ்டமி விரத பூஜை நன்மைகள் !!
திதிகளில் சந்தேகங்கள் வருவது உண்டு. ஏனெனில் திதிகளில் வளர்பிறை திதிகள் மற்றும் தேய்பிறை திதிகள் என்று இருவகையான திதிகள் உள்ளன. இவற்றில் எது இறைவனை வழிபட உகந்ததது என்ற கேள்வி எழலாம். நாம் இரண்டு திதிகளிலும் வழிபாடு செய்வதே மிகவும் சிறப்பானது.

பைரவருக்குரிய திதி என சிறப்பிக்கப்படும் திதி அஷ்டமி திதி ஆகும். இதில் வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி என இரண்டு அஷ்டமி திதிகள் உள்ளன. இவ்விரண்டு அஷ்டமி திதிகளுமே பைரவர் வழிபாட்டிற்கு உரியவை தான் என்பதில் ஐயமில்லை. 
 
எந்த தீய சக்தியும் நம்மை நெருங்க விடா மல் காப்பவர் ஸ்ரீ கால பைரவர். அப்படி காக்கும் பைரவரை வழிபட  சிறந்த தினங் களாக மாதத்தின் அஷ்டமி தினம் கருதப் படுகிறது. 
சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவ து பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வந்து வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.
 
வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடை யாது. வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேர த்திலும் பைரவ பெருமானை வழிபடலாம். 
 
நமது கடந்த ஐந்துபிறவிகளில் நாமே உருவாக்கியிருந்த கர்ம வினைகள் கரையத் துவங்கும், அதனால், இந்த ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நிறைவடைந்தப் பின்னர், நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கி வருமானம் அதிகரிக்கத் துவங்கும். அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி, அக்கா, அண்ணன், தம்பி, தங்கை, கணவன், மனைவி இவர்களிடையே இருந்து வரும் காழ்ப்புணர்ச்சி படிப்படியாகக் குறையத் துவங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை நீக்கும் மயில் இறகு !!