அக்னி மூலையான தென் கிழக்கு மூலையில் தான் சமையலறை அமைக்கவேண்டும். மாறாக வட கிழக்கு பகுதியில் அமைத்தால் செல்வத்தை எரிப்பதற்கு சமம் ஆகும். இதனால் வறுமை அதிகமாகும். வீட்டில் சமையல் செய்பவர்கள் கிழக்கு திசையை பார்த்தவாறு நிற்கும் படி இருப்பது நல்லது.
சமையல் அறையில் சமைப்பவரின் வலது பக்கத்தில் பாத்திரம் கழுவும் தொட்டியை வைக்க வேண்டும். தெற்கு மற்றும் மேற்கு திசையில் சமையல் பொருள்களை வைக்க உதவும் பரண் அல்லது அலமாரி அமைவது நல்லது. எந்தெந்த திசைகளில் சமையல் அறை அமைந்தால் என்ன பயன் என்று இப்போது பார்க்கலாம்.
கிழக்கு திசையில் சமையலறை அமைவதால் வம்ச விருத்தி, குடும்ப தலைவி உடல்நலம் பாதிக்கப்படும். தென் கிழக்கு திசையில் அமைந்தால் உணவின் சுவை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் எந்த தடையும் இல்லாமல் இனிதே நடக்கும்.
தெற்கு பகுதியில் சமையறை அமைத்தால் வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். கடன் தொல்லை அதிகமாகும். தென் மேற்கில் சமையலறை அமைந்தால் தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும்.
மேற்கு மற்றும் வடமேற்கில் சமையலறை அமைந்தால் நிம்மதியின்மை, சண்டைகள், வீண் செலவுகள் ஏற்படும். வடக்கில் சமையலறை அமைந்தால் குடும்பத்தில் உள்ள நபர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வரலாம்.
வடகிழக்கில் சமையலறை அமைந்தால் தீய பலன்கள் நடக்கும். சாப்பிடும் போது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி சாப்பிட்டால் உடல் நலம் சீராக இருக்கும். நோய்கள் வராது.