Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண் குறைபாடுகளை போக்கும் அற்புத மந்திரம்...!

Advertiesment
கண் குறைபாடுகளை போக்கும் அற்புத மந்திரம்...!
கண் பார்வைக் குறைபாடுகள் எதுவாக இருந்தாலும், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்லோகத்தை பக்திபூர்வமாக பாராயணம் செய்து வந்தால், கண்பார்வைக் குறைபாடுகள் நீங்கி பார்வையில் தெளிவு உண்டாகும்.
மந்திரம்: 
 
லோகாச் சதுர்த்தச மஹேந்த்ர முகாச்ச தேவா:
மூர்த்தித்ரயம் முனிகணாச்ச வஸிஷ்ட முக்யா:
ஸத்யோ பவந்தி ந பவந்தி ஸமஸ்த மூர்த்தே:
உன்மீலனேன தவ தேவி நிமீலனேன
 
இந்த ஸ்லோகத்தின் பொருள் இதுதான்: 
 
* தேவீ, பக்தர்கள் கேட்கும் வரங்களை நீ உடனுக்குடன் கொடுத்துவிடுவதால், நீ யாருக்குமே கடன்பட்டவள் இல்லை. உன்னுடைய அருளைப் பெற்ற பக்தர்களே உனக்குக் கடன்பட்டவர்கள் ஆகின்றனர்.
 
* நீ இப்படி பக்தர்கள் எப்போது என்ன வரம் கேட்பார்களோ என்று நினைத்து, பக்தர்களின் கோரிக்கைகளை கேட்பதற்காக உன் அழகிய விழிகளைக் கூட மூடாமல், எப்போதும் விழித்துக்கொண்டே இருக்கிறாய். உன்னைப் போலவே மீன்களும் கண் சிமிட்டாமல் இருக்கிறது.
 
* காதுவரை நீண்டிருக்கும் உனது அழகிய திருநயனங்கள, உன் கண்களைப் போலவே எப்போதும் கண் சிமிட்டாமல் இருக்கும் மீன்களைப் பற்றி கோள் சொல்வதுபோல் இருக்கிறது.
 
இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யமுடியாதவர்கள், காஞ்சிபுரத்தில் அருளும் அருள்மிகு ஏகாம்பரநாதர்பேரில் பதிகம் பாடி ஒரு கண்ணின்  பார்வையைப் பெற்ற சுந்தரரின் பதிகத்தை பாராயணம் செய்யலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடவுளுக்கு பூஜையின்போது தேங்காய் உடைப்பது எதனை உணர்த்துகிறது தெரியுமா....?