Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முருக பெருமானுக்கு உகந்த தைப்பூச திருநாளின் சிறப்புகள்...!!

முருக பெருமானுக்கு உகந்த தைப்பூச திருநாளின் சிறப்புகள்...!!
தைப்பூச நாளில்தான் உலகம் தோன்றியதாக ஐதீகம். சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம்  அளித்த நாள் தைப்பூசம் என்பர்.
* சிதம்பரத்துக்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை ரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது  இந்நாளிலேயே.
 
* தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தில் குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.
 
* வடலூரில் தை மாதத்தில் தைப்பூச நாளில் ஞான சபையில் அதி காலை அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வள்ளலார் ராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள். காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வரும் தினம் மிகவும் ஒரு
சிறப்பு வாய்ந்த தினமாகும்.
 
* வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தில்தான் சமாதியானார். இதை குறிக்கும் விதமாக  அவர் சமாதியான வடலூரில், தைப்பூச நாளில் லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
 
* முருகப்பெருமானுக்கும் பூசம் உகந்தது. அவர் பூச நட்சத்திரத்தில் தான் வள்ளியை மணந்து கொண்டார். இந்நாளில் முருகனுக்கு காவடி  எடுப்பதுண்டு.
 
* அகத்தியர் தந்த சிவகிரி, சக்திகிரி என்ற மலைகளை காவடி போல் கட்டி தூக்கி வந்தான் இடும்பன் என்ற அசுரன். அவனை தடுத்து நிறுத்தி, அந்த மலைகளை ஆட்கொண்டார் முருகபெருமான்.
 
“மலை போன்ற துன்பங்கள் உனக்கு வரலாம்; ஆனால், அதை சுமப்பது உன் வேலையல்ல. அதை என்னிடம் ஒப்படைத்து விடு. நீ உன்  பாதையில் செல்” என்பதே காவடி தத்துவம். இதற்காகத்தான், முருகன் கோவில்களில் பக்தர்கள் காவடி எடுப்பார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (08-02-2020)!