Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறைவழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற ஆடி செவ்வாய் !!

Advertiesment
இறைவழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற ஆடி செவ்வாய் !!
செவ்வாய்க்கிழமை என்பது நவகிரகங்களில் 'செவ்வாய்" கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நாளாகும். மேலும், செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை விரதமிருந்து  வழிபடுவதற்கு ஏற்ற கிழமையாகும்.

செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை மற்றும் முருகப்பெருமானை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
 
அதிலும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி மாத செவ்வாய்க்கிழமைகள் அனைத்துமே இறைவழிபாடு மற்றும்  விரதங்களுக்கு ஏற்ற நன்னாளாகும். 
 
பெண்கள் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்று  நம்புகின்றனர். 
 
செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கள கௌரி விரதம் கடைபிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும். ஆடி செவ்வாய்க்கிழமைகளில்  அன்னதானம் செய்தால், பிற நாட்களில் செய்வதைவிட அதிக பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 
 
ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும், அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சமடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க  வேண்டும்.
 
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமின்றி பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு விரதம் கடைபிடிப்பதும் நல்லது. ஆடி செவ்வாய் விரதம்  துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கையை பூஜிப்பது விசேஷமானது.  
 
செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைபட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில்  பங்கு பெறுவது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆடி மாத செவ்வாய்க்கிழமையில் கடைப்பிடிக்கப்படும் ஒளவையார் விரதம்...!!