Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமண தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய் வழிபாடு!!

திருமண தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய் வழிபாடு!!
, செவ்வாய், 20 ஜூலை 2021 (08:40 IST)
செவ்வாய்க் கிழமை விரதம் முருகனுக்கு மிகவும் உகந்ததாகிறது. அதிலும் ஆடிச் செவ்வாய் கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

 
செவ்வாய் சம்பந்தம் உடைய முருகன் தலங்களுக்குச் சென்று அங்கு இரவு தங்கி 1 நால் விரதம் இஎஉந்து அத்தலத்தில் உள்ள முருகண் சன்னதியில் அபிஷேக ஆராதனைகள் செய்து திருமுருகனை பூஜித்தால் பலன்கள் அதிகம். செவ்வாய்க்கும் ஸ்ரீமுருகப்பெருமானுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு. செவ்வாய்க்கும் முருகனுக்கும் மட்டுமல்ல, செவ்வாய்க்கும் பூமிக்கும் கூட தொடர்புகள் உண்டு.
 
செவ்வாய்க்கும் பூமிக்கும், பூமிக்கும் முருகனுக்கும், செவ்வாய்க்கும் முருகனுக்கும் தொடர்புள்ளதால்தான் பூமியில் நாம் செவ்வாயின் அம்சமாக முருகனை வழிபடுகிறோம். இந்த காரணத்தால்தான் செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடவும், விரதமிருக்கவும் ஏற்றதொரு புனித நாளாக இருக்கிறது. 
 
ஆடி செவ்வாய் கிழமைகளில் வீட்டின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களை பாடுவது மிகவும் நல்லது. பால் பாயாசம், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை நிவே தனம் செய்வார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றை கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும். 
 
ஆடி செவ்வாயன்று தலை குளித்து அம்மனை வழிபட திருமாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். இதுதவிர ஆடி செவ்வாயில் மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத்தக்கது. இந்த நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (20-07-2021)!