அருள் தரும் தமிழ் மாதமான ஆவணி மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்
கிரகநிலை:
ராசியில் சனி (வ), ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்:
21.08.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25.08.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து புதன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11.09.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து புதன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14.09.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து புதன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15.09.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் அறிவுத் திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் என்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வீடு மனை ஆகியவற்றை வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சனை வராமல் தடுக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தை குறைப்பது நல்லது. பெண்களுக்கு அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நல்ல முடிவுகள் வரும். கலைத்துறையினருக்கு பாதுகாப்பு அவசியம். பொருள் வரவில் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. அரசியல்வாதிகளுக்கு உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேல்படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சக மாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.
அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த மாதம் பொருளாதார நிலையில் சுமாரான நிலை இருக்கும். தொழிற்கல்வி பயில்வோர் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பிறதுறை சம்பந்தப்பட்ட மாணவர்கள் அதிகமாக முயற்சி எடுத்து படித்தல் அவசியம்.
சதயம்:
இந்த மாதம் உடன் வேலை செய்வோரின் ஆதரவால் அதனைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் வீட்டில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம்.
பூரட்டாதி 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் எல்லோரையும் அனுசரித்துச் செல்லவும். உங்களைப் பற்றி நீங்களே தாழ்வான எண்ணம் கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளவும். மற்றவர்களிடம் கடனோ அல்லது பொருளோ ஏதேனும் வாங்கியிருந்தால் அதனை உடனடியாக பைசல் செய்வதற்குண்டான வழிமுறைகளைப் பின்பற்றவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்;
பரிகாரம்: விநாயக பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: செப் 07, 08