அருள் தரும் தமிழ் மாதமான ஆவணி மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், கேது - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்:
21.08.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25.08.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து புதன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11.09.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து புதன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14.09.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து புதன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15.09.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மை தரும்.
குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. பெண்களுக்கு கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். கலைத்துறையினருக்கு பாராட்டுகள் வரும். வெளிநாடு பயணங்களும் இனிதே அமையும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். திடீர்ச் செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு திட்டமிட்டு பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் உடலில் இருந்த நோய்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதையும் சிந்தித்து செயல்படுவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்முறைகளை மாற்றிக் கொண்டு நன்மைகளைக் காண்பீர்கள்.
திருவோணம்:
இந்த மாதம் சுகம் பெருகும். மகிழ்ச்சி கூடும். பொருள் வரவு அதிகரிக்கும். பழைய பாக்கிகள் எளிதில் வசூலாகும். புகழ் தேடி வரும். ஒரு பெரிய அரசியல் கட்சி அல்லது அரசாங்கத்தின் அனுகூலம் கிடைக்கப் பெறுவீர்கள்.
அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் சகோதரத்தின் வெளிநாடு பயணம் இனிதே நடைபெறும். சுயசார்பும் தன்னிறைவும் பெறுவீர்கள். தைரியம் பளிச்சிடும். புதிய வழக்குகளை சந்திக்க நேரிடலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை நீங்கும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு மறையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி;
பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனீஸ்வரபகவானை நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்கி வர எல்லா காரியங்களும் வெற்றியடையும். உடல் ஆரோக்கியம் பெறும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 23, 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: செப் 04, 05, 06