Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - துலாம்

Advertiesment
2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - துலாம்
, வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (15:43 IST)
துலாம் - (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்) எதை எப்படி செய்ய வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த துலாராசியினரே நீங்கள் மனஉறுதிமிக்கவர். இந்த குருப் பெயர்ச்சி பணவரத்தை அதிகப்படுத்தும் அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும்.

சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும்  அதை செய்ய முடியாத  சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல்  ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறி யாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும்.
 
தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்த படி கிடைக்கும்.  வாக்கு வன்மையால் வாடிக்கை யாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக  தள்ளிப்போன பதவி உயர்வு  வர வேண்டிய பணம் வந்து சேரலாம்.
 
குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும்.  கணவன், மனைவி இருவரும் சேர்ந்து  எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.
 
பெண்களுக்கு: பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.  
 
மாணவர்களுக்கு:  சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.
 
பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.  மனமகிழ்ச்சி ஏற்படும்.
 
- பெருங்குளம் ராமகிருஷ்ணன்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - கன்னி