Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - கடகம்

Advertiesment
2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - கடகம்
, வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (15:09 IST)
கடகம் - (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) பார்வையாலேயே மற்றவர்களை பணியவைக்கும் திறமை உடைய கடகராசியினரே நீங்கள் சுறுசுறுப்பானவர். இந்த குருப் பெயர்ச்சியில் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். 
 
வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம்.    தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.
 
தொழில் வியாபாரம்  சுமாராக நடக்கும்.  ஆர்டர்கள் கிடைத்தாலும்  சரக்குகள் அனுப்புவது தாமதமாக இருக்கும். பழைய  பாக்கிகள் வசூல்  ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மிகவும் கவனமாக  பணிகளை  மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது  தாமதப்படும்.
 
குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக் கிடையே  கருத்து வேற்றுமை வந்து நீங்கும்.  உறவினர்களிடம் நிதானமாக  பேசுவது நல்லது.  பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். 
 
பெண்களுக்கு: எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.  பயணங்களின் போது உடமைகளை  கவனமாக   பார்த்துக் கொள்வது நல்லது. 
 
மாணவர்களுக்கு:  சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம்  நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக  படிப்பீர்கள். 
 
பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை அர்ச்சனை செய்து வணங்கிவர எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள்  அகலும்.
 
- பெருங்குளம் ராமகிருஷ்ணன்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்