Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

Advertiesment
2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - மேஷம்
, வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (14:35 IST)
மேஷம் - (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்) அடக்கத்தோடும், அன்புடனும் பழகும் மேஷ ராசியினரே உங்களுக்கு தற்பெருமையும் இருக்கும். இந்த குருப் பெயர்ச்சியால் உங்கள் ராசியை குரு ஏழாம் பார்வையாக பார்க்கிறார். 
 
தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம்  நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். டிசம்பர் வரை வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.
 
தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.
 
குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்.
 
பெண்களுக்கு: மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான  உதவிகள் கிடைக்கும்.
 
மாணவர்களுக்கு: கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது  கவனம் தேவை. 
 
பரிகாரம்: தேவி கருமாரியம்மனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும்.
 
- பெருங்குளம் ராமகிருஷ்ணன்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ரீ மகா லட்சுமி வாசம் செய்யும் இருப்பிடங்கள் எவை என்று தெரியுமா?