Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இஸ்ரேல் - ஹமாஸ் போர்: இறுதி ரிப்போர்ட்

Advertiesment
இஸ்ரேல்
webdunia

செல்வன்

, வியாழன், 7 ஆகஸ்ட் 2014 (11:24 IST)
காஸாவில் நடைபெற்று வந்த போர், கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.
 
உயிர் இழப்புகள்:
 
இஸ்ரேல்: 64 ராணுவ வீரர்கள், 3 சிவிலியன்கள்
ஹமாஸ் (Hamas): 300 வீரர்கள், 1600 சிவிலியன்கள்.
 
போர் தொடக்கத்தில் ஹமாஸிடம் 10,000 ராக்கெட்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டது. இதில் 3000 ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவபட்டன. அதில் வெறும் 3% மட்டுமே இஸ்ரேலின் இரும்பு டோமை(Iron dome)த் தாண்டி இஸ்ரேல் உள்ளே விழுந்தன. 97% ராக்கெட்டுகள் இரும்பு டோமால் தடுக்கப்பட்டன.
 
மீதம் இருந்தவற்றில் 3000 ராக்கெட்டுகள், இஸ்ரேலிய ராணுவ எதிர்த் தாக்குதலில் அழிக்கப்பட்டன. ஹமாசிடம் இன்னும் 3000 ராக்கெட்டுகள் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

webdunia
Iron Dome
 
ஹமாஸின் போர் உத்திகள் பின்வருமாறு:
 
2006இல் லெபனானின் ஹிஸ்புல்லா (Hisbulla) செய்தது போல், முழு இஸ்ரேலையும் ராக்கெட் தாக்குதலில் முடக்க வேண்டும். 
 
2006க்கு பின் 100 மில்லியன் டாலர் செலவில் இஸ்ரேலிய ராணுவத்துக்குத் தெரியாமல் 30 சுரங்கங்களை ஹமாஸ் வெட்டி இருந்தது,. இதன் வழியே இஸ்ரேலிய நகரங்களில் நுழைந்து தாக்குதல் நடத்தி இஸ்ரேலிய ராணுவ வீரர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடிக்க வேண்டும். இஸ்ரேலிய நகரங்களில் நேரடியாக படை மூலம் தாக்க வேண்டும்.
 
இப்பக்கம், ஹமாஸ் தாக்குதல் நடத்த, மறுபக்கம் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்த வேண்டும்.
 
ஊடகங்கள், போராட்டங்கள் மூலம் மேலை நாடுகளில் வலுத்த பிரச்சாரம் செய்வது.
 
நிகழ்ந்தது:
 
ஹமாஸ் அனுப்பிய ராக்கெட்டுகளை இஸ்ரேலின் இரும்பு டோம் முழுமையாகத் தடுத்து முறியடித்தது.
 
ஹமாஸின் சுரங்கங்களை இஸ்ரேல் துல்லியமாகக் கணக்கெடுத்து வைத்திருந்தது. கடும் ராக்கெட் தாக்குதலை மீறி, ஹமாசால் சுரங்கங்கள் உள்ளே நுழைய முடியவில்லை. ஒரே ஒரு முறை தான் சுரங்கத்தின் வழி நுழைந்து இஸ்ரேலிய வீரர்கள் மூவரைக் கொல்ல முடிந்தது. பிணைக் கைதிகளைப் பிடிக்கும் முயற்சி வெற்றி அடையவில்லை. இறுதியில் முப்பது சுரங்கங்களும் முற்று, முழுக்க இஸ்ரேலால் குண்டுவைத்து அழிக்கப்பட்டன. பல சுரங்கங்கள் நாலைந்து மைல் நீளம் கொண்டவை. "சுரங்கத்தை அழித்தபின் தான் காஸாவில் இருந்து இஸ்ரேலிய ராணுவம் வெளியேறும்" என இஸ்ரேலிய அதிபர் பீபி நெதன்யாகு (Bibi Nethanyahu) அறிவித்திருந்தார். இப்போது 30 சுரங்கங்களும் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

webdunia
(ஹமாஸின் சுரங்கங்களை அழிக்கும் இஸ்ரேலிய ராணுவம்)
 
2006இல் ஹிஸ்புல்லாவிடம் இஸ்ரேல் தோல்வி அடைந்திருந்தாலும், லெபனான் நகரங்கள் இஸ்ரேலிய குண்டுவீச்சில் தரைமட்டமாகி இருந்தன. அதனால் மீண்டும் தாக்குதலில் நுழைய, ஹிஸ்புல்லா விரும்பாமல் ஒதுங்கிவிட்டது.
 
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்கள், உலகவளாவிய முறையில் வலுவாக நடந்தன. ஆனால் இஸ்ரேலிய தரப்பும் அதைச் சரியாக எதிர்கொண்டது. வழக்கமாகப் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு கொடுக்கும் நாடுகள், அமைப்புகள் இம்முறையும் ஆதரவு கொடுத்தன. இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்கா, உறுதியாக இஸ்ரேல் பக்கம் நின்றது. ஒபாமா, இஸ்ரேலுக்கு எதிராகக் கருத்துச் சொல்லியிருந்தாலும், இறுதியில் இஸ்ரேலிய இரும்பு டோமைப் பலப்படுத்த 300 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கினார். இந்த மசோதா, அமெரிக்க காங்கிரஸில் விவாதத்துக்கு வந்தபோது செனட்டில் 100 - 0 என்ற விகிதத்திலும், காங்கிரஸில் 424 - 8 என்ற விகிதத்திலும் நிறைவேறியது. 
 
இந்தியாவிலும் பிரிட்டனிலும் பாலஸ்தீன ஆதரவு காங்கிரஸ், லேபர் கட்சிகள் ஆட்சியில் இல்லாமல் இஸ்ரேலுடன் நல்லுறவு பூணும் பாஜக, கன்சர்வேடிவ் கட்சிகள் ஆட்சியில் இருந்தன. அதனால் இந்தியப் பாராளுமன்றத்தில் பாலஸ்தீன விவகாரம் விவாதிக்கப்படாமல் தடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சியின் இஸ்ரேலிய ஆதரவைக் கண்டித்து, பிரிட்டிஷ் எம்பி ஒருவர் ராஜினாமா செய்தார்.
 
அரபு வசந்தம் (Arab Spring), ஐசிஎஸ். (ISIS) பீதியால் அரபு நாடுகள் பலவும் ஹமாஸுக்கு ஆதரவு கொடுக்காமல் ஒதுங்கின. இறுதியில் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தபோது, ஹமாஸின் எதிரியான பாலஸ்தின பதா (FATAH) அமைப்பின் தலைவர் முகமது அப்பாஸ் தலைமையில் ஒரே ஒரு ஹமாஸ் பிரதிநிதியைப் பேச்சுவார்த்தை நடத்த, எகிப்துக்கு அனுப்பும் நிலை ஹமாஸுக்கு உருவானது
 
மொத்தத்தில் போர்க்கள ரீதியில் இஸ்ரேலுக்கு வெற்றியைக் கொடுத்த இந்தப் போரின் பாதிப்புகள் முழுக்க, பாலஸ்தீன மக்களால் உணரபட்டன. பல குடியிருப்புகள், பள்ளிகள், மசூதிகள், இஸ்ரேலிய குண்டுவீச்சில் தகர்க்கப்பட்டன. குழந்தைகள் பலர் உயிரிழந்தார்கள். இஸ்ரேலிய தரப்பில் இரும்பு டோமால் போரின் விளைவுகள் மக்களைத் தாக்கவில்லை. போரை அவர்கள் டிவியில் மட்டுமே பார்த்தார்கள். காஸா பகுதியின் அடிப்படைக் கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளான சோகத்துக்கு நிவாரணம், எகிப்தில் நடைபெறும் பேச்சு வார்த்தையில் தீர்க்கப்டுமா என்பது கேள்விக் குறிதான். 
 
எப்போரிலும் இறுதியாகத் தோற்பவர்கள் மக்கள் மட்டுமே!!
 

Share this Story:

Follow Webdunia tamil