Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரா போடாமல் போவதா பெண்ணியம்? - ரஷ்யப் பெண்களின் மாற்றுச் சிந்தனை

பிரா போடாமல் போவதா பெண்ணியம்? - ரஷ்யப் பெண்களின் மாற்றுச் சிந்தனை
webdunia

செல்வன்

, வெள்ளி, 14 நவம்பர் 2014 (14:28 IST)
உலகில் பெண்ணியத்தைக் கண்டுகொள்ளாத நாடு எதுவெனில் அது ரஷ்யா தான்.
 
ரஷ்ய சமூகத்தில் பெண்களின் வேலை, அழகாக உடை உடுத்தி, நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு இல்லத்தரசியாக வீட்டில் இருப்பது. ஆனால் சற்று வித்தியாசமாக, குடும்பத்தின் முழு நிதி நிர்வாகமும் பெண் கையிலேயே. "ஆண் குடும்பத்தின் தலை என்றால் பெண் அதன் கழுத்து" என்பது ரஷ்யப் பழமொழி.
 
சமைப்பது, துணி துவைப்பது, குழந்தையை வளர்ப்பது எல்லாமே பெண்ணின் வேலை மட்டுமே. அதைத் தவிர பெண்ணிய இயக்கம் என்றாலே ரஷ்யப் பெண்களுக்குக் கடும் வெறுப்பு. ரஷ்யப் பெண்கள் பெண்ணிய இயக்கங்களைச் சோம்பேறித்தனத்தையும் வன்முறையையும் வளர்ப்பவையாகவும் பெண்ணியவாதிகள் ஆண்களை மாதிரி நடந்துகொள்வதாகவும் கருதுகிறார்கள்.
 
மேலை நாடுகளில் முன்நிறுத்தப்படும் நவீன பெண்ணியம், ரஷ்ய பெண்களுக்குப் பிடிப்பது இல்லை. "அமெரிக்க பாப் கல்ச்சரில் (pop culture) பெண்கள், ஆண்களைப் போல ஏப்பம் விடுவதையும், பிரா போடாமல் போவதையும் பெண்ணியம், புரட்சி என்கிறார்கள். பெண்ணியம் பெண்மையைக் கொன்றுவிட்டது. பெண்கள் ஆண்களைப் போல் மாறிவிடுவதா பெண்ணியம்?" என்கிறார்கள்.
 
அய்யோ.. ஆணாதிக்கம் என யாரோ அலறும் சத்தம் கேட்கிறது. அதெல்லாம் கிடையாது. 78% ரஷ்யப் பெண்கள் இதைத்தான் விரும்புகிறார்கள். பெண்கள் தேர்ந்தெடுப்பதுதானே பெண்ணியம்?

webdunia
 
இது ஏதோ பெண்ணியத்தைப் பற்றித் தெரியாததால் பேசும் பேச்சல்ல. முதன்முதலில் சோவியத் யூனியன் உருவானபின் பெண்ணியம் அமலான நாடே ரஷ்யா தான். பெண்களுக்கு முதலில் ஓட்டுரிமை வழங்கப்பட்ட நாடும் ரஷ்யாவே. நாடெங்கும் பெண்கள் சுத்தி அரிவாளுடன் நிற்கும் சிலைகள் நிறுவப்பட்டன. பெண்களுக்கு "வேலை செய்யும் உரிமை" கொடுக்கப்பட்டது. அதாவது ஆண்களைப் பிடித்துக் கசக்கி எடுப்பது போல், பெண்களையும் கட்டாய வேலை செய்யப் பணித்து, ட்ரில் எடுத்தார்கள்.
 
சோவியத் யூனியன் வீழ்ந்ததும் பெண்கள் கம்யூனிசத்தைத் தொலைத்துத் தலை முழுகியதுபோல், பெண்ணியத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு, மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். "பெண்ணியம் வருமுன் தாயாக, மனைவியாக இருந்தால் மட்டும் போதும். இப்போது எல்லா வேலையையும் செய்ய வேண்டி உள்ளது" என்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil