Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டுவிட்டர் போர்: இந்தியாவை கேலி செய்வதாக நினைத்து அவமானப்பட்ட இங்கிலாந்து

டுவிட்டர் போர்: இந்தியாவை கேலி செய்வதாக நினைத்து அவமானப்பட்ட இங்கிலாந்து
, புதன், 31 ஆகஸ்ட் 2016 (16:31 IST)
சேவாக்-மோர்கன் இடையே டுவிட்டரில் தொடர்ந்து வார்த்தை போர் நடந்துக்கொண்டிருக்கிறது. பியர்ஸ் மோர்கன் இந்தியாவை கேலி செய்தவதாக நினைத்து பதிவிடும் ஒவ்வொரு கருத்துக்கும் சேவாக் டுவிட் செய்து விளாசி தள்ளுகிறார்.


 

 
ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நிலையை கேலி செய்து இங்கிலாந்து பத்திரிக்கையாளர் பியர்ஸ் மோர்கன், 120 கோடி மக்களை கொண்ட இந்திய நாடு ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்கள் பெற்றதை கொண்டாடுவது அவமானம் என்று டுவிட் செய்திருந்தார்.
 
அதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், நாங்கள் சின்ன சின்ன சந்தோஷத்தையும் கொண்டாடக் கூடியவர்கள். கிரிக்கெட்டை அறிமுகப்படுத்திய உங்களால் இதுவரை உலக கோப்பை வெல்லாதது அவமானமாக இல்லையா என்று பதில் தெரிவித்திருந்தார்.
 
அதோடு முடிந்தது என்று நினைத்தால் இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் மோர்கன் தொடங்கினார். வழக்கம் போல இந்தியாவை கேலி செய்வதாக நினைத்து ஒரு கருத்தை பதிவிட்டார்.
 
அதில், ‘ஒரு மில்லியன் பெட், இந்தியா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதற்குள், நாங்கள் உலக கோப்பையை வென்றுவிடுவேம்’ என்று பதிவிட்டு இருந்தார்.
   
அதற்கு பதில் அளித்த சேவாக், இந்தியாவிடம் ஏற்கனவே 9 தங்கப்பதக்கங்கள் உள்ளன, இங்கிலாந்திடம் தான் உலக கோப்பை இல்லை, என்று பதல் அளித்தார்.
 
இந்தியாவை கேலி செய்வதாக நினைத்துக்கொண்டு இங்கிலாந்தின் மானத்தை காற்றி பறக்க விட்டு கொண்டிருக்கிறார் பியர்ஸ் மோர்கன்.
 
சேவாக் களத்தில் பந்தை விளாசுவது போல் டுவிட்டரிலும் விளாசி தள்ளுகிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒருநாள் கிரிக்கெட்: 444 ரன்கள், இங்கிலாந்து உலக சாதனை