Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எதற்காக ஒருவன் கடவுளை நேசிக்க வேண்டும் - சுவாமி விவேகானந்தர்

எதற்காக ஒருவன் கடவுளை நேசிக்க வேண்டும் - சுவாமி விவேகானந்தர்
என் மகனே! மரணம் நேருவதைத் தடுக்க முடியாது. கற்களைப் போலவும், கட்டைகளைப் போலவும் செத்து மடிவதை விட வீரர்களைப் போல இறப்பது மேலானது அல்லவா? அதிலும் மற்றவர்களுக்கு செயவதற்காக அழிந்து போவது மிகவும் நல்லது.

 
* துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
 
* நமது குழந்தை நிலையை எண்ணி இப்போது சிரிப்பது போல, இன்னும், ஐம்பது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதைய நிலையை  எண்ணிச் சிரிப்போம்.
 
* எதற்காக ஒருவன் கடவுளை நேசிக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதில் கண்டுபிடித்தாக வேண்டும். இதை  நாம்அறிந்துகொள்ளாத வரையில், எதுவுமே புரிந்து கொள்ள முடியாது.
 
* பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
 
* நூல்களைக் கற்கலாம், சொற்பொழிவுகளைக் கேட்கலாம், பல மணி நேரம் தொடர்ந்து பேசலாம், ஆனாலும் அனுபவமே சிறந்த  ஆசான். அதுவே உண்மையான கல்வி.
 
- விவேகானந்தர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாஸ்து : தென்மேற்கு மூலை‌யி‌ல் வர‌க் கூடியவை - வர‌க் கூடாதவை!