Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆன்மிக சிந்தனைகள்......

Advertiesment
ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆன்மிக சிந்தனைகள்......
மனிதனின் மனம் கடுகுப்பொட்டலம் போன்றது. அந்தப் பொட்டலம் கிழிந்து கடுகு நாலாபுறங்களிலும் ஓடிவிட்டால் அதை ஒன்றுசேர்ப்பது சிரமம். அதுபோல, மனம் உலகவிஷயங்களில் சிதறத் தொடங்கினால் அதைக் குவித்து ஒருமுகப்படுத்துவது சுலபமானதல்ல.

 
* கடவுளைத் தேடுபவன் கடவுளை அடைகிறான். செல்வத்தையும், செல்வந்தர்களையும் நாடுபவன் அவற்றையே அடைகிறான்.  வாழ்வில் எதை விரும்பி நாடுகிறார்களோ அதையே அடைவார்கள்.
 
* ஒளியை உணர்பவன் இருளையும் உணர்கிறான். பாவத்தைப் பற்றித் தெரிந்தவனுக்குப் புண்ணியமும் இன்னதென்று  தெரிந்திருக்கும். குணத்தைப் பற்றி அறிந்தவன், குற்றத்தைப் பற்றியும் அறிந்திருப்பான்.
 
* பழங்கள் நிறைந்த மரம் எப்போதும் கனத்தினால் தாழ்ந்து வளையும். அதுபோல நீங்கள் பெருமை மிக்கவராக  வாழவேண்டுமானால் அடக்கமும் பொறுமையும் தேவை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிருபானந்த வாரியாரின் ஆன்மிக சிந்தனைகள்...