Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரமண மகரிஷி அருளுரை: ஆசை படுவது யார்?

ரமண மகரிஷி அருளுரை: ஆசை படுவது யார்?
ஆசை படுவது யார்? என்று நீங்கள் அமைதியாக உட்கார்ந்து சிந்தியுங்கள்.

 
உங்கள் உடலா?, உங்கள் மனமா? நிச்சயம் உடலாக இருக்க முடியாது. ஏனெனில் அது மனம் வழியே செயல்படுகிறது. பிறகு மனமா?ஆமாம். இப்பொழுது அப்படியே இருக்கட்டும். மனம் எப்படி செயல்படுகிறது? உங்கள் இறந்தகால,வருங்கால எண்ணங்களினால், அறிந்ததை அடைய ஆவல் கொண்டு உங்களை அலைய வைக்கிறது.
 
“இதோ இன்பம்,அதோ இன்பம்” என்று உங்களை விரட்டிக் கொண்டே இருக்கிறது. ஆனால் ஒன்றை அடைந்தால், அதில் சலிப்புற்று, வேறு ஒன்றிற்கு ஏன் ஆசைபடுகிறீர்கள்? என்று என்றைக்காவது ஆழ்ந்து சிந்தித்து இருக்கிறீர்களா?
 
இந்த உடலுக்கும் மனதிற்கும் எது ஆதாரம், ஏன் மனம் அலை பாய்ந்துக்கொண்டிருக்கிறது என்று தனிமையாக சிந்தித்து  இருக்கிறீர்களா? அப்படி ஒருவர் சிந்திக்கத் தொடங்கினால், உண்மையில் “தான் யார்” என்று விளங்க ஆரம்பிக்கும். அது  உங்கள் “உயிர்தன்மை” யைத் தவிர வேறு எதுவும் இல்லை.
 
அது தன் உணர்வாய், தன் அறிவாய், தன்னையே தேடுகிறது. ஆனால் அதுவே மனமாகி,படர்க்கை நிலை அடைந்து, அந்த “தேடுதலை” சாதாரண மக்களிடம் இந்த உலகத்தில் தேட வைக்கிறது. தன்னை தானே தேடுவது உண்மைநிலை. 
 
உலகத்தில் தேடுவது பொய்மைநிலை. இந்த வித்தியாசத்தை ஒருவன் நன்றாக புரிந்துக் கொள்ளவேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமாவாசையில் சுபகாரியங்கள் செய்யலாமா? நல்லதா?