Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பகவான் ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிக அருளுரை

பகவான் ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிக அருளுரை
1924ஆம் ஆண்டு பகவான் ஸ்ரீ அரவிந்தரின் உடலில் இறை சக்தி இறங்கிய நாள். அந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் சித்தி தினம் என்று ஸ்ரீஅரபிந்தோ ஆஷ்ரமத்தில் கொண்டாடப்படுகிறது. அரவிந்தர் மேற்கொண்ட யோக பாதையில் இந்த நிகழ்வு ஒரு  குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

 
ஸ்ரீ அரவிந்தர்
 
முதலில் சைத்திய புருஷனை அடையாளம் காதல் சாத்தியமில்லை. செய்ய வேண்டியது என்னவென்றால், புற ஆளுமையிலிருந்தும் இயற்கையிலிருந்தும் வேறான ஓர் உள் ஜீவனை உணரத் தொடங்க வேண்டும் - பிரகிருதியின் புறச்  செயல்களிலிருந்து விலகி அமைதியாக இருக்கிற ஓர் உணர்வு அல்லது புருஷன்.
 
உள் ஜீவன் விழித்தெழும் கட்டம் ஒன்று சாதனையில் உள்ளது. அடிக்கடி அதன் முதல் விளைவு கீழ்க்கண்ட அம்சங்கள்  கொண்ட நிலைமையாக இருக்கும்:
 
1. ஒரு வகையான சாட்சி மனப்பான்மை. உள் உணர்வு நடப்பவற்றையெல்லாம் ஒரு பார்வையாளரைப் போல் பார்க்கும்,  விஷயங்களைக் கவனிக்கும், ஆனால் நேரடியாக ஈடுபடவோ அவற்றில் இன்பம் காணவோ செய்யாது.
 
2. மகிழ்ச்சியோ துக்கமோ இல்லாமல் அமைதி மட்டும் இருக்கும் ஒரு நடுநிலை.
 
3. நடப்பவை எல்லாவற்றிலுமிருந்தும் தான் வேறானவன், அதைக் கவனிக்கிறவன் ஆனால் அதன் ஒரு பாகமாக இல்லாதவன்  என்னும் உணர்ச்சி.
 
4. விஷயங்கள், மனிதர்கள் அல்லது நிகழ்ச்சிகள் எவற்றிலும் பற்றில்லாதிருத்தல்.
 
எல்லா விஷயங்களும், ஆழமற்றவையாகவும் ஆன்மாவுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் பொருளற்றவையாகவும் ஆகும்  நிலைமை மேற்பரப்பிலுள்ள உணர்விலிருந்து பின் வாங்கி உள் உணர்வில் வாழ்வதில் ஒரு கட்டமாகும்.
 
ஒருவன் உள் உணர்வினுள் போகும்போது அதை அமைதியான எவ்வித இயக்கமும இல்லாத வெறும் இருக்கையாக (pure  existence), ஆனால் என்றென்றும் அமைதியாகவும் எதனாலும் அசைக்கப்படாமம், புற இயற்கையிலிருந்தும் பிரிந்தும்  இருப்பதாகவும் உணர்வான். இயக்கங்களிலிருந்து தன்னைப் பிரித்து, அவற்றிலிருந்து விலகி நிற்பதன் விளைவாக இந்த நிலை  வரும். இது சாதனையில் மிகவும் முக்கியமான இயக்கமாகும்.
 
அதன் முதல் விளைவு முழுமையான அமைதி, ஆனால் பின்னர் அந்த அமைதி (அமைதி போய்விடாமல்) சைத்திய மற்றும் பிற அக இயக்கங்களால் நிரம்பும், அது புற வாழ்க்கைக்கும் இயற்கைக்கும் பின்னால் ஓர் உண்மையான அக வாழ்க்கையும் ஆன்மீக  வாழ்க்கையையும் உண்டாக்கும். அப்பொழுது புற வாழ்க்கையையும் இயற்கையையும் ஆள்வதும் மாற்றுவதும் எளிது.
 
உள் ஜீவன் உள் மனம், உள் பிராணன், உள் உடலால் ஆனது. சைத்திய புருஷன் எல்லாவற்றிற்கும் பின்னால் இருந்து  அவற்றைத் தாங்குகிறது. வழக்கமாக உள் மனத்தில்தான் இந்தப் பிரிவினை முதலில் நிகழ்கிறது. உள் மன புருஷன், தான்  மோனமாக இருந்து பிரகிருதியைத் தன்னிலிருந்து வேறாக உள்ள ஒன்றாகப் பார்க்கிறது. ஆனால் உள் பிராண புருஷனோ  அல்லது உள் உடல் உணர்வோ, அல்லது எந்த இடம் என்று இல்லாமல் புருஷ உணர்வு முழுவதுமோ முழு பிரகிருதியிலிருந்து  பிரிந்துள்ளதாக உணரலாம். சில சமயங்களில் அது தனக்கு மேல் உணரப்படும். அப்பொழுது பொதுவாக அதை ஆத்மா  என்பார்கள். அந்த அனுபூதி மோன ஆத்மாவின் அனுபூதி.
 
மொ.பெ. :- ச. மகாலிங்கம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி