Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை
மூலாதாரக் குண்டலினியை தானாகவும் முயன்று மேலே எழுப்பலாம். குருநாதர்களின் உதவியாலும் மேலே எழும்பச்  செய்யலாம். இப்படி படிபடிப்படியாக அவை மேலே எழும்பப் பல காலம் பிடிக்கும்.

 
மூலாதாரக் குண்டலினி எழுப்ப பல நிலைகளைக் கடந்து வர வேண்டும். மேலும் அது சிலருக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடும்.  அதனால்தான் அதை நேரடியாக எழுப்புவது சிறந்தது என்கிறார் வள்ளலார். அதற்கு சமரச சன்மார்க்க சங்கத்தை நாடலாம்  என்பதையே ”ஆசாரியார் அனுக்கிரகம்” என்று வள்ளலார் கூறுகிறார்.
 
யோக சாதனையில் மிக உயரிய உச்சத்தை அடைந்தவர் வள்ளற் பெருமான். அதைக் கொண்டுதான் “சாகாக் கலை” என்ற உயரிய கலையை அவர் உலக மக்களுக்கு எடுத்துரைத்தார். மூலாதாரத்திலிருந்து எழும்பு குண்டலினியை ஒழுங்குபடுத்தினால்,  அதை ஆக்ஞாவையும் கடந்து துரியாதீத நிலைக்குக் கொண்டு சென்றால் அங்கே இறை தரிசனம் கிட்டும். கடவுளைக்  காணலாம். உணரலாம் என்பதே அவர்தம் கருத்து.
 
குண்டலினி ஒரு பாம்பு போலச் சுருண்டு கிடக்கிறது மூலாதாரத்தில். அதைத் தான் ஔவையும் சுட்டுகிறார். ”மூலாதாரத்தின் மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்தே…” இது விநாயகர் அகவலில் வரும் பாடல் வரிகள்.
 
வள்ளற் பெருமானும் தனது உரைநடையில் ஆதி அநாதி என்ற சொற்றொடரைக் குறிக்குமிடத்து ஆதி, கீழ் என்பது காலைக் குறிக்கும் என்றும், அநாதி, மேல் என்பது தலையைக் குறிக்கும் என்றும் குறிப்பிடுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்