Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

இராமேஸ்வரத்தில் உள்ள 22 தீர்த்தங்களின் சிறப்புகள்...!

Advertiesment
இராமேஸ்வரம்
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் சிவனுக்குரிய கோவிலாகும். இராமர் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகின்றது. இக்கோவில் இந்து சமயத்தின் பிரிவுகளான சைவம், வைணவம் இரு சமயத்தினருக்கும் முதன்மையாக உள்ளது.
ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை போக்க ராமன் மணல்களால் ஆன  லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார். எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு “ராம ஈஸ்வரம்” என்று பெயர் ஆனது.  மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.
 
22 தீர்த்தங்களும் அவற்றின் சிறப்புகளும்:
 
1. மகாலெட்சுமி தீர்த்தம்: இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில்  நீராடுவதால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.
 
2. சாவித்திரி தீர்த்தம், 3. காயத்ரி தீர்த்தம், 4. சரஸ்வதி தீர்த்தம்: இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. இம்மூன்று நீராடுவதால் மத சடங்குகளை விட்டவர் சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்.
 
5. சேது மாதவ தீர்த்தம்: இதில் நீராடுவதால் ஸ்ரீராபிரானால் சகல லெட்சுமி விலாசமும், சித்த சக்தியும் பெறலாம்.
 
6. நள தீர்த்தம்: இதில் நீராடுவதால் சுரிய தேஜசை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.
 
7. நீல தீர்த்தம்: இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.
 
8. கவாய தீர்த்தம்: இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மனைவலினம், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.
 
9. கவாட்ச தீர்த்தம்: இதில் நீராடுவதால் நரகத்திற்கு செல்ல மாட்டார்கள். மன வலிமை, தேக ஆரோக்கியம், திட சரீரம் கிடைக்கும்.
 
10. கந்நமாதன தீர்த்தம்: இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்.
 
11. சங்கு தீர்த்தம்: இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.
 
12. சக்கர தீர்த்தம்: இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.
 
13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம்: இதில் நீராடுவதால்பிரம்மஹத்தயாதிதோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன், பில்லி சுனியமும்  நீங்கும்.
 
14. சூர்ய தீர்த்தம்: இத்திர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானமும் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.
 
15. சந்திர தீர்த்தம்: இதில் நீராடுவதால் ரோக நிவர்த்தி அகலும்.
 
16. கங்கா தீர்த்தம் 17. யமுனா தீர்த்தம் 18. காயத்ரி தீர்த்தம்: இம்மூன்று தீர்தத்தங்களும் நீராடுவதனால் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவைகளும்  அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.
 
19. சாத்யாம்ருத தீர்த்தம்: இதில் நீராடினால் தேவதாகோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை  கிடைக்கும்.
 
20. சிவ தீர்த்தம்: இதில் நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
 
21. சர்வ தீர்த்தம்: இதில் நீராடினால் பிறவிக்குருடு, நோயும் நரை திரையும் நீங்கி வளமடையலாம்.
 
22. கோடி தீர்த்தம்: இந்த தீர்த்தமானது இராமர் லிங்கப் பிரதிஷடை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது. அதனால் ராமர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது. அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது. கோடி திர்த்தத்தில் நீராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது என்பது சம்பிரதாயம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (28-12-2018)!