Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் சில..

ஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் சில..
, புதன், 19 ஜூன் 2019 (19:32 IST)
1. கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது.
 
2. திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது. அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்பு அடையும்.
 
 
3. கர்ப்பமான பெண்கள் உக்கர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது.
 
4. பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது.
 
5. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
 
6. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.
 
7. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது).
 
8. கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது.
 
9. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.
 
10. கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.
 
11. தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும்.
 
12. வெள்ளிக்கிழமைகளில், விஷேச நாட்களில் (பண்டிகை நாட்களில்) பாகற்காயை சமைக்க கூடாது. அவ்வாறு செய்வதால் பாவம் வந்து சேரும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (19-06-2019)!