Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குளிக்கும்போது இனி மேக்கப் கலையாது: வேடிக்கையூட்டும் புதிய கண்டுபிடிப்பு

குளிக்கும்போது இனி மேக்கப் கலையாது: வேடிக்கையூட்டும் புதிய கண்டுபிடிப்பு
, புதன், 12 ஜூன் 2019 (14:29 IST)
ஷெர்டான் எல்லி என்ற பெண், குளிக்கும்போது மேக்-அப் கலையாமல் இருப்பதற்காக “SHOWERSHIELD” என்ற வேடிக்கையான ஒன்றை கண்டுபிடித்திருப்பது, சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்படுகிறது.

விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும், வானம் கடந்த விண்வெளி ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில், சில வேடிக்கையான கண்டுபிடிப்புகளும் மக்களை திரும்பிப் பார்க்க வைக்கத்தான் செய்கிறது.

இந்த வரிசையில் ஷெர்டான் எல்லி என்ற பெண்மனி, குளிக்கையில் மேக்-அப் கலையாமல் இருக்க “SHOWERSHIELD” என்ற ஒன்றை கண்டுபிடித்து உள்ளார்.

இந்த “SHOWRSHIELD”-ஐ பற்றி ஷெர்டான் கூறுவது என்னவென்றால் தான் ஒரு முறை ஷவரில் குளித்துக்கொண்டிருந்தபோது தனது முகத்தில் மேக்-அப் கலையாமல் இருக்க தனது முகத்தை அவ்வப்போது தனது கைகளால் மறைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டதாக கூறியிருக்கிறார்.

மேலும் இந்த கஷ்டத்தை வேறு எந்த பெண்ணும் அனுபவிக்க கூடாது என்ற எண்ணம் தான் இதை கண்டுபிடிக்க தூண்டியது என்றும் ஷெர்டான் எல்லி கூறியுள்ளதாக தெரியவருகிறது.

ஷெர்டானின் “SHOWERSHIELD”-ன் வடிவம், முகத்தை மட்டுமே மூடும் ஒரு கண்ணாடி பொருத்திய கவசம் போல் இருக்கும் என்றும், அதை அணிந்துகொண்டு நாம் மேக்-அப் கலையுமே என்ற வருத்ததை மறந்து நிம்மதியாக குளிக்கலாம் என்றும் அதன் வடிவமைப்பாளர்கள் கூறியுள்ளதாக தெரிகிறது.

மேலும் இது ஆன்லைன்களில் மற்றுமே நம்மால் வாங்கமுடியும் என்றும் கூறுகின்றனர். ஷெர்டான் எல்லி தனது அடையாளமோ அல்லது இருப்பிடமோ குறித்து எந்த ஒரு தகவலையும் அளிக்கவில்லை. இதனால் சிலர் இதை பணமோசடி வேலை என்றும் விமர்சிப்பதாக தெரியவருகிறது

ஷெர்டானின் இந்த கண்டுபிடிப்பு பலரால் கேலிக்கு உள்ளாக்கப்பட்டாலும்,பெண்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்காததற்கு ஜாதிதான் காரணமா?