Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

Advertiesment
Bhagavathymman Temple Kudamuzku
, சனி, 25 நவம்பர் 2023 (13:33 IST)
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகேயுள்ள பாலசமுத்திரம் ஸ்ரீ பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.


இக்கோயிலின் குடமுழுக்கு  விநாயகர் வழிபாட்டுடன் கோயில் முன்பு கம்பம்  ஊன்றப்பட்டு அப்பகுதி மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீர் எடுத்து வந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் வைத்து பூர்ணாஹூதி, வாஸ்து பூஜை, வாஸ்து சாந்தி, புனர்பூஜை, நாடி சந்தானம், திரவ்யஹூதி, மகா பூர்ணாஹூதி என மூன்று கால சிறப்பு யாக பூஜைகள் நடத்தியதை தொடர்ந்து யாக சாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று  கோயிலில் உள்ள மூலஸ்தான விமான கலசங்களுக்கு சிவ ஸ்ரீ வெங்கட ரமேஷ் அய்யர் மற்றும் வெங்கடேஷ் அய்யர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தி வைத்தனர்.

இந்த குடமுழுக்கு விழாவில் தொட்டியம் பாலசமுத்திரம், கார்த்திகைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 10,000 மேற்பட்டோர் பங்கேற்று வழிபட்டனர். குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் பாலசமுத்திரம் பகவதி அம்மன் கோவில் ஊர் பொதுமக்கள் சார்பாக அன்னதானம் மற்றும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை பாலசமுத்திரம் ஊர் பொதுமக்கள் மற்றும் கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பான ஏற்பாடுகளை தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புனித சவேரியார் தேவாலய கொடியேற்றம்!