Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூலி வேலைக்கு சவுதி சென்றவருக்கு லாட்டரியில் ரூ.57 கோடி பரிசு! - மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!

Advertiesment
Kerala labour

Prasanth Karthick

, வியாழன், 8 மே 2025 (08:51 IST)

சவுதியில் லேபராக கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த கேரள நபர் லாட்டரியில் ரூ.57 கோடி வென்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அதிகமான வருவாய்க்காக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் மக்கள் சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு செல்வது அதிகமாக உள்ளது. இவ்வாறாக செல்பவர்கள் அங்கு லாட்டரியில் சீட்டு எடுத்து சில சமயம் ஒரே நாளில் கோடீஸ்வரர்களாகி விடும் சம்பவங்களும் நடக்கிறது. அவ்வாறான சம்பவம் தற்போது நடந்துள்ளது.

 

திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அலியார் குஞ்சு. 60 வயதாகும் இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த 40 ஆண்டு காலமாக சவுதியில் பணியாற்றும் அலியார் குஞ்சு, அதில் ஈட்டிய வருமானத்தை வைத்து 2 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளதுடன், மூன்றாவது பெண் திருமணத்திற்காகவும் கடுமையாக உழைத்து வந்துள்ளார்.

 

இந்நிலையில்தான் சவுதியில் அபுதாபி பிக் லாட்டரியை எடுத்துள்ளார். அதில் அதிர்ஷ்டவசமாக அவருக்கு முதல் பரிசே விழுந்துள்ளது, இது இந்திய மதிப்பில் ரூ.57 கோடியாகும். இதனால் அலியார் குஞ்சும் அவரது குடும்பத்தினரும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

 

இதுபற்றி தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ள அலியார் குஞ்சு, தான் 40 ஆண்டுகள் சவுதியில் கஷ்டப்பட்டதற்கு இறுதியாக மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ உள்ளதாகவும், இந்த பணத்தில் ஊரில் சொந்தமாக தொழில் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியிடம் சொல்ல சொன்னாயே, சொல்லிவிட்டேன்.. போதுமா இன்னும் வேணுமா? மீம்ஸ் வைரல்..!