Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கை சின்னத்திற்கு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த ஹஸன் மௌலானா !

Advertiesment
Congress candidate in campaign
, செவ்வாய், 30 மார்ச் 2021 (12:31 IST)
வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹஸன் மௌலானா வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளார். 

 
வேளச்சேரி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஹசன் மவுலானா தொகுதிக்குட்பட்ட தரமணி பகுதியில் அண்ணா தெரு காமராஜர் தெரு பெரியார் நகர் போன்ற பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
 
இவர் வாக்கு சேகரிப்பின் போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள அறிக்கைகளைப் பற்றியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் உள்ள அறிக்கைகள் பற்றியும் முழுமையாக வாக்காளர்கள் இடத்தில் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்.
 
வாக்கு சேகரிப்பின் போது காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் துரை உள்ளிட்ட  நிர்வாகிகளும் தொண்டர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேளச்சேரி பகுதி செயலாளர் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏனைய கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் 2 இடங்களில் 33 பேருக்கு கொரோனா! – தீவிரமடையும் பாதிப்புகள்!