மதுரை மாவட்டத்தில் உள்ள 8 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் போலியாக விடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது என்பதோடு, சென்னையில் உள்ள பள்ளிகள், முதல்வர் வீடு, கவர்னர் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக போலியான மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்போது மதுரை மாவட்டத்தின் நரிமேடு, பொன்மேனி, நாகமலை, உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இதுவரை மதுரையில் மட்டும் எட்டு தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகவும், இதனை அடுத்து நடத்தப்பட்ட சோதனைகளில் இது வெறும் வதந்தி என்றும், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
வெடிகுண்டு மிரட்டல் வந்த அனைத்து பள்ளிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு முடிவடைந்ததாகவும், எனவே மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.