Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் ரெடி நீங்கள் ரெடியா ? செந்தில்பாலாஜிக்கு சவால் விடும் அதிமுக நிர்வாகி ?

Advertiesment
நான் ரெடி நீங்கள் ரெடியா ? செந்தில்பாலாஜிக்கு  சவால் விடும் அதிமுக நிர்வாகி ?
, செவ்வாய், 27 அக்டோபர் 2020 (23:22 IST)
கடந்த சில வாரத்திற்கு முன்னர் கரூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க கட்சி தான் ஜெயிக்கும் என்றும் அதுவும் ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் 4 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதாகவும், இதற்கு பந்தயம் கட்ட தயாரா ? என்றும் கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக வினர் ரெடியா ? என்று முண்டாசு கட்டி விட்டு தற்போது சென்ற வாரம் வரை தி.மு.க வினர் அதிரடியாக பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களிலும் வைரலாக்கி விட்டனர். 

மேலும், ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று ரூபாய் நோட்டுகளை பல ஆயிரங்களை எண்ணிய படி, நான் எங்கே வர்றட்டும், எத்தனை லட்சம் கொண்டு வர்றட்டும், என்று எண்ணி காட்டிய படியே அ.தி.மு.க வினரை தி.மு.க வினர் சீண்டினர். இந்நிலையில், கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் கே.என்.ஆர்.சிவராஜ் அவரும் ஒரு வீடியோவினை வெளியிட்டார். அதில் சாதாரண அ.தி.மு.க தொண்டன் நான் சவால் விடுகின்றேன் என்றும் எப்போது பணம் கட்டலாம் என்றும், பத்திரப்பதிவுடன் பணம் கட்ட ரெடியா ? அவருடைய  நகையை அடமானம் வைத்து ரூ 10 லட்சம் பந்தயத்திற்கு நான் ரெடி, என்றும் செந்தில் பாலாஜியின் சவாலுக்கு எதிர் சவால் விட்டு ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டார். கடந்த 7 தினங்களுக்கு முன்னர் அவர் வெளியிட்ட அவரது வீடியோ., கரூர் மாவட்டம் மட்டுமில்லாது, தமிழக அளவில் வைரலாகி வருவதோடு, உண்மையான தி.மு.க வினரும் அந்த வீடியோ வினை லைக் செய்து வருகின்றனர். காரணம், திடீரென்று அ.தி.மு.க கட்சியிலிருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பின்பு தி.மு.க என்று பல்வேறு கட்சிகளில் இருந்து வெளியேறி தற்போது திடீரென்று தி.மு.க வில் இணைந்த அவருக்கு உடனே கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் பதவி அதுவும் மட்டுமல்லாமல், அவருடன் வந்த அவரது ஆதரவாளர்களுக்கு மட்டும் பதவி, உண்மையாக கட்சியில் விசுவாசமிக்க தி.மு.க வினருக்கு நாமமா ? என்ற ஐயத்தினையும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவற்றிற்கு மத்தியில் இந்த வீடியோ ஒரு வைரலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அ.தி.மு.க நிர்வாகியும், அ.தி.மு.க தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளருமான கே.என்.ஆர்.சிவராஜ் ன் பேச்சிற்கு இதுவரை தி.மு.க வினர் அடக்கி வாசித்து வருகின்றனர். தி.மு.க வினர் என்பதை விட செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களே என்று கூறலாம் என்கின்றனர் கரூர் மாவட்டத்தினை சார்ந்த உண்மையான தி.மு.க வினர். இது மட்டுமில்லாமல், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரூர் வந்திருந்த பா.ஜ.க கட்சியின் மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன், பேட்டியளிக்கும் போது, தி.மு.க   செந்தில் பாலாஜி தேர்தல் வரும் முன்னரே, முண்டாசு கட்டி விட்டுள்ளார். அவரது இந்த பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரது இந்த சவால் எத்தனை கோடி செலவிட காத்திருக்கின்றார் என்ற ஐயத்தினையும் ஏற்படுத்தியுள்ளது, ஆகவே இவரது பேச்சு விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்றார். மேலும், இந்நிலையில் ஆங்காங்கே செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போதெல்லாம் இதே போல, கூறி வந்த தி.மு.க வின் செந்தில் பாலாஜிக்கு, அதிமுக நிர்வாகி கே.என்.ஆர்.சிவராஜ். ஒரே ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அதில் பந்தயத்திற்கு நான் ரெடி, எங்கள் அமைச்சர் கூட உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை, தி.மு.க வினரும் சரி, எங்கே பத்திரப்பதிவுடன் கூடிய பந்தயம் கட்ட ரெடி என்று ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவிகளுடன் பாலியல் உறவு…நேரலையில் லட்சக்கணக்கில் சம்பாதித்த நபர்…திடுக் சம்பவம்