2026 ஆம் ஆண்டில் பாமக ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமக க அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் இத்தேர்தலில் 70 க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று வென்றது.
இதையடுத்து நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் பாமக தனித்துப் போட்டியிட்டது.
இந்நிலையில் பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், முதலமைச்சர் பதவி ஆசையோ, வெறியோ எனக்கு இல்லை. தமிழ் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக தமிழ் நாட்டை பாட்டாளி மக்கள் கட்சி ஆள வேண்டும் என்பதுதான் இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.