இன்றைய அரசியல் நிலவரத்தில் அவ்வளவு ஆட்சி அதிகார பீடத்தில் அமர்ந்திருப்பவர்களை நாம் அனுகிவிட முடியாது. ஆனால் இன்று கேரள மாநில பினராயி விஜயன் அவர்கள், ஒரு மாற்றுத்திறனாளி இளைஞருடன் செல்பி எடுத்துக்கொண்டார். அதில் என்ன ஆச்சர்யம் என்றால், அந்த இளைஞர் தன்னம்பிக்கையுடன் கால்களால் செல்பி எடுத்ததார். அப்போது முதல்வர் இளைஞரின் கால்களை தொட்டு நலம் விசாரித்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அதுதான் இன்றைய ஹாட் நியூஸ் மற்றும் வைரல் போட்டோவாக சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதுகுறித்து திமுக.,வைச் செர்ந்த கனிமொழி எம்பி தனது டுவிட்டர் கூறியுள்ளதாவது, பணிவு மற்றும் மாற்றத்தின் உதாரணம் எனப் பதிவிட்டு இந்த போட்டோவை பதிவிட்டுள்ளார்.
இத்தனை எளிமையான முதல்வரான பினராயி விஜயனை இன்றைய அரசியல் சூழலில் இந்தியா கண்டு கொண்டுள்ளது. ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அவரை நெருங்கிய ஒரு மாற்றுத்திறனாளி இளைஞர் அவரது தோளில் கைபோட்டு போட்டோ எடுத்துக்கொண்டார். அப்போது முதல்வர் பழனிசாமி சிரித்துக்கொண்டே அதை ஏற்றுக்கொண்டார்.
இது மாற்றத்திற்கான நேரம் .. என பலரும் குரல் கொடுத்து வரும் வேளையில், அரசியல்வாதிகளும் ஆள்வோரும், அதிகாரிகளும் மக்களால் நெருங்க முடிந்த அளவு எளிமையாக இருந்தால் அது உண்மையான மாற்றத்திற்கு வழிகோலும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.