காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய இளைஞர்.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்..!

Siva
வெள்ளி, 7 நவம்பர் 2025 (15:12 IST)
கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த குளக்காரன்பட்டியை சேர்ந்த வினிதா என்ற 21 வயது கல்லூரி மாணவி மீது, காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் ரஞ்சித் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார்.
 
திருச்சியில் பி.பார்ம் படிக்கும் வினிதா, உடல்நலக்குறைவால் தனது வீட்டிற்கு வந்திருந்தபோது, நேற்று இரவு 11:30 மணியளவில் ரஞ்சித் கொதிக்கும் சமையல் எண்ணெய்யை ஜன்னல் வழியாக அவர் மீது ஊற்றினார்.
 
தீக்காயமடைந்த வினிதா வலி தாங்காமல் கதறியதை கேட்டு பெற்றோர் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். வினிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பாலவிடுதி காவல்துறையினர் ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர். 
 
காதலை மறுத்ததால் அரங்கேறிய இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்படி ஒரு வியாதியா? எறும்புகளை கண்டு பயந்து இளம்பெண் தற்கொலை!

திருமண பத்திரிகை கொடுப்பது போல் வந்த கொள்ளையர்கள்.. மூதாட்டியை கட்டிபோட்டு கொள்ளை..!

நீங்கள் நிம்மதியாக ஓய்வு பெற முடியாது: தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு பிரியங்கா காந்தி எச்சரிக்கை

பொது இடங்களில் இருந்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்! - உச்சநீதிமன்றம் உத்தரவு!

22 ஆண்டுகளில் இல்லாத அதிக பணிநீக்கம்: அக்டோபரில் மட்டும் 1.5 லட்சம் பேர் வேலை இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments