Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னாள் காதலிக்கு கல்யாண ஏற்பாடு – கத்தியால் குத்திய காதலன் சரண்டர் !

Advertiesment
முன்னாள் காதலிக்கு கல்யாண ஏற்பாடு – கத்தியால் குத்திய காதலன் சரண்டர் !
, திங்கள், 18 நவம்பர் 2019 (08:15 IST)
தனது முன்னாள் காதலிக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதை தெரிந்துகொண்ட காதலர் அவரைக் கத்தியால் குத்திவிட்டு காவல்நிலையத்தில் சரண்டர் ஆகியுள்ளார்.

பண்ருட்டியை சேர்ந்த காட்டான்டிகுப்பத்தைச் சேர்ந்த தனலட்சுமி சென்னையில் உள்ள சிப்ஸ் கடை ஒன்றில் வேலைப்பார்த்துள்ளார். அதேக் கடையில் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேலும் வேலைப் பார்த்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருவரும் பேசிக்கொள்வது இல்லை என சொல்லப்படுகிறது. தனலெட்சும்மிக்கு அவரது வீட்டில் திருமணத்துக்காக ஏற்பாடு செய்வதாகவும் அதனால் அவர் சிதம்பரத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளதையும் அறிந்த சக்திவேல் அங்கே சென்று தனலெட்சுமியை சந்தித்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழ தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனலெட்சுமியைக் குத்தியுள்ளார். ரத்தவெள்ளத்தில் மிதந்த தனலெட்சுமி அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவர் இறந்துவிட்டதாக நினைத்துக்கொண்ட சக்திவேல் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஆனால் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்க்கு வழிவிடுங்கள்: ரஜினி, கமலிடம் மறைமுக வேண்டுகோள் விடுத்த எஸ்.ஏ.சி