Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவிக்கு உதவியாக வந்த கொளுந்தியாளை திருமணம் செய்த இளைஞர்: போலீசில் மாமியார் புகார்..!

Advertiesment
marriage

Siva

, வியாழன், 18 ஜனவரி 2024 (06:41 IST)
மனைவி பிரசவம் ஆனபோது உதவியாக வந்த கொழுந்தியாளையும் திருமணம் செய்த இளைஞர் மீது அவரது மாமியார் காவல்துறையில் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சென்னை கொடுங்கையூர் என்ற பகுதியைச் சேர்ந்த சோனியா மற்றும் சொர்ணா ஆகிய இருவரும் இரட்டை குழந்தைகள். இவர்களில் சோனியா என்பவரை ஆழ்வான் என்ற நபர் காதலித்து திருமணம் செய்துகொண்டு குடித்தனம் நடத்தினார். 
 
இந்த நிலையில் சோனியா கர்ப்பமான நிலையில் அவரது சகோதரி சொர்ணா தனது சகோதரிக்கு உதவியாக சென்றார். இந்த நிலையில் சொர்ணாவையும் ஆழ்வான் ஆசை வார்த்தை காட்டி திருமணம் செய்து தனியாக ஒரு வீட்டில் வைத்து குடித்தனம் நடத்தியதாக தெரிகிறது.  இதனை அடுத்து ஒரு கட்டத்தில் இருவரையும் ஒரே வீட்டில் வைத்துக் குடித்தனம் செய்து கொண்டிருந்த நிலையில் தான் இரண்டு மகள்களுக்கும் ஆழ்வானுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. ’
 
இதனை அடுத்து இரண்டு மகள்களும் தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்தபோது அவர்களை ஆழ்வான் மிரட்டியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது மாமியார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 
 
இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மனைவியின் பிரசவத்திற்கு உதவியாக வந்த கொழுந்தியாளை திருமணம் செய்த ஆழ்வான் இருவரையும் மிரட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை திரும்பும் தென்மாவட்ட மக்கள்.. பெருங்களத்தூர் அருகே ஊர்ந்து செல்லும் வாகனங்கள்..!